பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

UNIX wizard

1504

unpack



UNIX wizard : யூனிக்ஸ் வழி காட்டி : வல்லமைபெற்ற, உதவும் மனப்பாங்குள்ள யூனிக்ஸ் நிரலர். சில நிறுவனங்கள் இதையே ஒரு பணிப்பெயராகப் பயன்படுத்துகின்றன. comp. unix. wizards என்னும் செய்திக்குழு, பயனாளர்களின் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கிறது.

unknown host : தெரியாப் புரவன்; கண்டறியாப் புரவன் : கிளைக் கணினி, ஒரு குறிப் பிட்ட வழங்கன் கணினியில் இணைப்புக் கேட்டு கோரிக்கை சமர்ப்பிக்கும்போது, அத்தகைய வழங்கனைப் பிணையத்தில் கண்டறிய முடியவில்லை யெனில் இத்தகைய பதிலுரை கிடைக்கும்.

unknown recipients : தெரியாத பெறுநர், கண்டறியாப் பெறுநர் : ஒரு மின்னஞ்சலில் குறிப் பிட்டுள்ள பெறுநர் முகவரியைக் கண்டறிய முடியாதபோது அனுப்புநருக்குக் கிடைக்கும் தரவு.

unlighted dot : ஒளியூட்டாத புள்ளிக் குறி.

unload : இறக்கு; நீக்கு : ஒரு நிரல் தொடரை நினை வகத்திலிருந்து நீக்குவது. நாடா அல்லது வட்டினை அதன் இயக்கியிலிருந்து நீக்குவது.

unmark : அடையாளம் நீக்கல் : ஒரு சொற்பகுதியினை அதன் முக்கியத்துவத்திலிருந்து நீக்குதல், ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குச் சேர்க்கப்பட்ட ஒன்றின் அடையாளத்தை நீக்குதல்.

unmoderated : நடுவரில்லாத; கண்காணிப்பாளரில்லாத : செய்திக் குழுக்களுக்கும், அஞ்சல் பட்டியல்களுக்கும் பெரும்பாலும் நடுவர் ஒருவர் இருப்பார். அவ்வாறு நடுவர் இல்லாத செய்திக்குழுக்களில் வழங்கனால் பெறப்படும் அஞ்சல் பட்டியல்களில் செய்திகள், கட்டுரைகள், சந்தாதாரர்களுக்குத் தாமாகவே அனுப்பி வைக்கப்படும்.

uոmoսոt : பெயர்த்தெடு; கழற்று; நீக்கு : ஒரு கணினியில் ஒரு வட்டினையோ நாடாவையோ பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுதல். வன்பொருளாகக் கழற்றியெடுக்க வேண்டியதில்லை. மென்பொருள் கட்டளை மூலமாகவும் செய்ய முடியும். யூனிக்ஸ் முறைமையில் இச்சொல் அதிகம் பயன்படுகிறது.

unpack : பிரி; அவிழ் : இதற்கு முன்பு கட்டப்பட்ட தரவுகளின் சிறு அலகைத் தனித்தனியாகப் பிரிப்பது.