பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

upper memory block

1507

urban legend



upper memory block (UMB) : நினைவக மேல்கட்டம் (யுஎம்பி) : 80386 அல்லது சிறந்த அமைப்பின் கீழ் இருக்கும் 1 மீமிகு எட்டியலுக்கும் 640 கிலோ எட்டியலுக்கும் இடையில் உள்ள நினைவகக் கட்டம். சாதன இயக்கிகளும் டிஎஸ்ஆர்களும் யுஎம்பி-யில் ஏற்றப்படலாம். ஏனென்றால், பயன்பாடுகளுக்குத் தேவையான வழக்கமான நினைவகத்தில் அதிக இடம் விட்டுவிட்டு அடிப்படை நினைவகத்தின் மதிப்புமிக்க இடத்தினை இவை எடுத்துக் கொள்ளாமல் இருக்க இது உதவும்.

UPS : யுபீஎஸ் : தடங்கலில்லா மின் வழங்கல் எனப் பொருள்படும் Uninterrupted Power Supply என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினிக்கும் மின்வழங்கு முனைக்கும் இடையே பயன்படுத்தப்படும் சாதனம். இதனுள்ளே ஒரு மின் கலம் இருக்கும். திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டால், கணினிக்கு மின்கலத்திலிருந்து மின்சாரம் கிடைத்துவிடும். இதனால் கணினி தடங்கலின்றி தொடர்ந்து செயல்படும். மின் தடங்கலை உணர்ந்து உடனடியாக மின்கலத்துக்கு மாற்றித் தரும் சிறப்பு உணரி உள்ளே இருக்கும். 10 அல்லது 20 நிமிடங்களே மின்கலத்திலிருந்து கணினிக்கு மின்சாரம் கிடைக்கும். இந்த நேரத்துக்குள் பயனாளர் தன்னுடைய பணியை முறைப்படி முடித்துக் கொள்ள வேண்டும். முக்கிய தரவுகளை சேமித்துக் கொள்ள வேண்டும்.

uptime : மேல்நேரம் : நிற்காமல் ஒரு கருவி எவ்வளவு நேரம் வேலை செய்கிறது என்பதைக் குறிப்பிடும் கால அளவு.

upward compatible : மேல் நோக்கிய ஏற்புடைமை : இதற்கு முந்தைய மாதிரிகள் செய்யக் கூடிய அனைத்தையும் மேலும் கூடுதல் பணிகளைச் செய்யக் கூடிய கணினி அமைப்பு அல்லது வெளிப்புறச் சாதனம் என்பதைக் குறிப்பிடும் சொல் தொடர்.

urban legend : நகர்புறக் கதை : இணையத்தில் நிகழ்நிலை உரையாடல்களில் சுற்றுக்கு வரும் வதந்திகள். உண்மை போல் தோற்றமளிக்கும் வதந்திகளை சிலர் உலவ விடுவதுண்டு. ஒரு சிறுவனுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவை என்பது போன்ற செய்திகள் உலவுவதுண்டு. ஆர்வத்தைத் தூண்டும்