பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

U. S. Department of Defence

1509

user account



வினாடிக்கு 1. 5 மெகாபிட் தரவுகளை கணினிக்கும் புறச்சாதனங்களுக்ககுமிடையே பரிமாற்றவல்ல நேரியல் பாட்டை. குறுவட்டு (CD-ROM) இயக்ககங்கள், அச்சுப்பொறிகள், இணக்கிகள் (Modems), சுட்டிகள் (mice), விசைப்பலகைகள் போன்ற 127 புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப்பயன் துறை வழியாக கணினியுடன் இணைக்க முடியும். டெய்சி சக்கர இணைப்பின்மூலம் இது சாத்தியம். உடனிணைப்புகளையும், பலவகை தரவுத் தாரைகளையும் ஏற்கும். இன்டெல் நிறுவனம் உருவாக்கியது. டெக் நிறுவன அக்செஸ் பாட்டையுடன் போட்டியிடக் கூடியது, குறிப்பாக குறைவேகப் பயன்பாடுகளில்.

U. S. Department of Defence : யு. எஸ். பாதுகாப்புத்துறை : அமெரிக்க அரசின் இராணுவப் பிரிவுதான் அக்கால ஆர்ப்பா நெட்டை (ARPANET) உருவாக்கியது. Advanced Research Project Agency என்பதன் சுருக்கமே ARPA என்பது. அன்றைய ஆர்ப்பா நெட்தான் இன்றைய இணையமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

use : பயன் : தரவுகளை அணுகுவதற்கு தரவுத் தளங்களைத் திறக்க டிபேஸ் III பிளஸ் மற்றும் ஃபாக்ஸ் பேஸ் போன்ற மொழிகளில் பயன்படுத்தப்படும் ஒரு கட்டளை. திறந்த தரவு, பயன்பாட்டில் உள்ளதாகக் கருதப்படும்.

use error correction : பிழை திருத்தும் வசதி.

usenet : யூஸ்நெட் : செய்திக் குழுக்களுக்கான பிணையம்.

usenet user list : யூஸ்நெட் பயனாளா் பட்டியல் : மாசா சூசட்ஸ் தொழில்நுட்ப நிறு வனம் (MIT) பராமரித்து வரும் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல். யூஸ்நெட்டில் அஞ்ச லிடும் பயனாளர்களின் பெயரை யும் மின்னஞ்சல் முகவரி களையும் இப்பட்டியல் கொண்டிருக்கும்.

user : பயனாளர் : 1. சிக்கல் தீர்த்தல் அல்லது தரவு கையாளலுக்கு கணினியைப் பயன்படுத்துபவர் அல்லது சொந்தமாக வைத்திருப்பவர். 2. கணினி அமைப்பின் பணிகள் தேவைப் படுபவர்.

user account : பயனாளர் கணக்கு : பாதுகாப்பான பல் பயனாளர் கணினி அமைப்புகளில், அதை அணுகவும் அதன் வளங்களைப் பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறை.