பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

utility

1513

ՍTP



utility : பயன்பாடு ; பயன்பாட்டு நிரல் தொடர் : ஒரு பயனாளர் பிற நிரல் தொடர்கள், நிரல் தொடர்மொழிகள், நிரல் தொடர் செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை ஒட்ட, மேம்படுத்த, உருவாக்க அல்லது பகுத்தாய உதவும் நிரல் தொடர்.

utility function : பயன்பாட்டுப் பணி : வட்டிலிருந்து நாடாவுக்குத் தரவுகளை நகலெடுத்தல் அல்லது கோப்புகளை வகைப்படுத்தல் அல்லது கலத்தல் போன்ற பணிகளைச் செய்யும் பயன்பாட்டு நிரல் தொடரின் பணி.

utility programms : பயன்பாட்டு நிரல் தொடர்கள் ; பயனீட்டுச் செயல்பாட்டு முறைகள்; பயனீட்டுச் செயல் முறைகள் : ஒரு பட்டியல் ஊடகத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டிலிருந்து நாடா) தரவுகளை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொதுவாகத் தேவைப்படும் பணிகளை வழங்கும் கணினி நிரல் தொடர்கள். பெரிய கணினி அமைப்புகளை விற்பவர்கள் அவற்றுடன் பலதரப்பட்ட பயன்பாடுகள் மற்றும் பயனாளர்களுக்குப் பயன்படும் பயன்பாடுகளையும் சேர்த்தே விற்பார்கள். நினைவகத் திணிப்பு நிரல் தொடர்கள், நிரல் தொடர் பிழை நீக்கும் உதவிகள், கோப்பு கையாளும் நிரல் தொடர்கள், கணித வாலாயங்கள், வகைப்படுத்தும் நிரல் தொடர்கள், சொல் தொகுதி தொகுப்பிகள் ஆகியவற்றை சான்றாகக் கூறலாம்.

utility routine : பயன்பாட்டு வாலாயம் : வகைப்படுத்தல், கலத்தல் போன்ற கணினி அமைப்பின் இயக்கத்திற்கு அடிக்கடி தேவைப்படுகின்ற செயல்முறைகளைச் செய்யப் பயன்படும் மென்பொருள்.

utility software : பயன்கூறு மென்பொருள்.

utilization ratio : பயன்பாட்டு விகிதம்.

utilization statistics : பயன்கூறு புள்ளிவிவரம்; பயன்பாட்டுப் புள்ளிவிவரங்கள் : காலத்தை ஒட்டிய கணினியின் செயல்பாடு பற்றிய அளவீடுகள்.

UTP : யுடீபீ : உறையிடா முறுக்கிணை என்று பொருள்படும் Unshielded Twisted Pair என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒன்று அல்லது மேற்பட்ட முறுக்கிணைக் கம்பிகளை கொண்ட, கூடுதலான உறைகள் எதுவும் இடப்படாத ஒரு வடம். உறையிட்ட