பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

UUCP

1514

uuencode


யுடீபி

முறுக்கிணை வடத்தைவிட நெகிழ்வானது. குறைந்த இடப்பரப்பையே எடுத்துக் கொள்ளும். ஆனால் குறைவான அலைக்கற்றை அகலம் கொண்டது.

UUCP : யுயுசிபி : யூனிக்ஸிலிருந்து யூனிக்ஸுக்கு நகலெடுப்பு என்று பொருள்படும் UNIX-to-UNIX Copy என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நேரியல் தரவுத் தொடர்பினை, குறிப்பாக பொது இணைப்பகத் தொலைபேசிப் பிணையத்தைப் பயன்படுத்தி யூனிக்ஸ் கணினிகளுக்கிடையே தரவுப் பரிமாற்றம் செய்யப் பயன்படும் மென்பொருள் நிரல்களின் தொகுப்பு.

uudecode1 : யுயுடிக்கோடு1 : யுயு குறியாக்கம் செய்யப்பட்ட ஒரு கோப்பினை மூல இரும வடிவமைப்பாக மாற்றும் யூனிக்ஸ் நிரலின் பெயர். இந்த நிரல் (யுயுஎன்கோடு நிரலோடு சேர்ந்து), படிமங்கள், இயக்கு நிலைக் குறிமுறை போன்ற இரும வடிவிலான தரவுகளை மின்னஞ்சல் செய்திக்குழு வழியாக அனுப்பிவைக்க உதவுகிறது.

uudecode2 : யுயுகுறிவிலக்கம்2 : யுயுகுறியாக்கம் செய்யப்பட்ட கோப்பு ஒன்றினை யுயுடீக் கோடு நிரல் மூலமாக மீண்டும் மூல இருமக் கோப்பாகவே மாற்றும் செயல்முறை.

. uue : . uue : யுயுடீக்கோடு நிரல் மூலமாக, ஆஸ்கி வடிவமைப்பிலிருந்து குறிவிலக்கம் செய்து மீண்டும் இரும வடிவமைப்பாகவே மாற்றியமைக்கப்படும் கோப்பின் வகைப்பெயர்.

uuencode1 : யுயுஎன்கோடு1 : ஒரு பைட்டிலுள்ள ஒவ்வொரு பிட்டும் முக்கியத்துவம் உள்ள ஒரு இருமக் கோப்பினை அச்சிடத்தக்க 7துண்மி (பிட்) ஆஸ்கி எழுத்துகளாக, தரவு இழப்பு ஏற்படாவண்ணம் மாற்றியமைக்கும் ஒரு யூனிக்ஸ் நிரல். இந்நிரல் யுயுடீக்கோடு நிரலுடன் சேர்ந்து, படிமங்கள்,