பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uuencode

1515

. UZ



இயக்குநிலைக் குறிமுனை போன்ற இரும வடிவிலான தரவுகளை மின்னஞ்சல், செய்திக்குழு வழியாக அனுப்பிவைக்க உதவுகிறது. இவ்வாறு குறியாக்கம் செய்யப்பட்ட கோப்பின் அளவு மூலக் கோப்பின் அளவில் மூன்றில் ஒரு பங்கே இருக்கும்.

uuencode2 : யுயுகுறியாக்கம்2 : யுயுகுறியாக்க நிரல்மூலம், ஒர் இருமக் கோப்பினை அச்சிடுவதற்கேற்ற 7 துண்மி (பிட்) ஆஸ்கி உரைக்கோப்பாக மாற்றியமைக்கும் செயல்முறை.

uupc : யுயுபீசி : ஐபிஎம் பீசிக்கள் மற்றும் டாஸில் செயல்படும் பீசி ஒத்தியல்புக் கணினிகள், விண்டோஸ் அல்லது ஒஎஸ்/2 முறைமைகளுக்கான பதிப்பு. தொலைதூரப் பிணையக் கணினிகளில் நுழைய, கோப்புகளைப் பதிய, நிரல்களை இயக்கப் பயன்படும் நிரல்களின் தொகுப்பு.

. uy : . யுஒய் : ஒர் இணைய தள முகவரி உருகுவே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. uz : . யுஇஸ்ட் : ஒர் இணைய தள முகவரி உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.