பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. va

1517

vacuum tube


நடைபெறும் நேரியல் தகவல் தொடர்புகளுக்காக, சர்வதேச தொலைத் தகவல் தொடர்பு சங்கம் (ITU) உருவாக்கிய தர வரையறைகள். எளிய அடைவு அணுகல் நெறிமுறை (Light weight Directory Access Protocol - LDAP) ஒத்த ஒரு நெறிமுறையைப் பயன்படுத்தி தகவல், பொதியுறையிடப்பட்டு அனுப்பப்படுகிறது. ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை ஒன்று சேர்த்து அனுப்பி வைக்க முடியும்.

. va : விஏ : ஒர் இணையதள முகவரி வாட்டிகன் நகரைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

VAB : விஏபி : குரல் மறுமொழி வங்கி : 'குரல் மறுமொழி வங்கி' என்று பொருள்படும் "Voice Answer Bank" என்பதன் தலைப்பெழுத்துசொல். இது ஒரு தொலைபேசி பிணையத்துடன் ஒரு கணினிப் பொறியமைவை பிணைக்கின்ற ஒர் ஒலி மறுமொழிச் சாதனம். இது தொலைபேசி நாடா முனையங்களிலிருந்து வரும் வினாக்களுக்குக் குரல்மூலம் விடையளிக்கிறது. vaccine : தடுப்பூசி; தடுப்புநோய்த் தடுப்பி : ஒரு கணினி அமைப்பு அல்லது தரவு வட்டுகளில் உள்ள நச்சு நிரல் (வைரஸ்) களை நீக்கப் பயன் படும் மென்பொருள்.

vaccum chamber : வெற்றிட அறை.

vaccum tube வெற்றிடக் குழாய்; வெற்றிடக் குழல் : மின்னோட்டம் பாய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான சாதனம். மின்பெருக்கி கண்டுபிடிக்கப் படுவதற்குமுன்பு கணினிகளில் காணப்பட்ட தலையாய மின்னியல் சாதனம். வெற்றிடக்குழாயைப் பயன்படுத்தும் கணினிகள், முதல் தலைமுறைக் கணினிகள் எனப்படும்.