பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VAL

1518

value-added reseller


VAL : விஏஎல் : எந்திரன் இயக்கு மொழி : "Vicarm Arm Language" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, எந்திரமனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கணினி மொழி.

validation : செல்லுபடியாக்கம்; செல்லுபடி சோதனை; ஏற்புடைத்தாக்கல் : உருவமைவு (எண் தோரணிகள், எழுத்திடைவெளி, எழுத்துகள்), வீச்செல்லைகள் (மேல் கீழ் மதிப்பளவு வரம்புகள்), சரிபார்க்கும் எண், ஒரு தலையாய கோப்பிலுள்ள சரிநிகர்ப் பதிவுகள் போன்ற சில வரிகளில் துல்லியத்திற்கான தரவு ஆய்வு.

validation rule : செல்லுபடி விதி; ஏற்புத் தகுதி விதி.

validation suite : செல்லுபடிச் சோதனைத் தொகுதி : ஒரு நிரலாக்க மொழியின் வரையறுக்கப்பட்ட வரன்முறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என்பதை அளவிடுவதற்கான சோதனைகள் அடங்கிய ஒரு தொகுதி.

validation text : செல்லுபடி உரை.

validity check : ஏற்புத்தகுதிச் சரிபார்ப்பு : செல்லுபடிச் சரிபார்ப்பு : பெறப்படுகின்ற தரவு முன் வரையறுக்கப்பட்டுள்ளபடி முழுமையானதாகவும் முரண்பாடின்றியும் உள்ளதா என்று தீர் மானிக்க மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வுச் செயல்பாடு.

valid octal numbers : முறைப்படியான எட்டிலக்க எண்கள்

value : மதிப்பளவு : மதிப்பு : மதிப்பீடு : ஒரு கணினியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலை எண் அல்லது எண்ணளவு.

value added network (VAN) : மதிப்பேற்றுப் பிணையம்; மதிப்புக் கூட்டிய பிணையம் : ஒரு பொது ஊர்தியிலிருந்து செய்தித்தொடர்புக் கம்பிகளைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, அதில் மேம்பாடுகளைச் சேர்த்து அவற்றை மேம்படுத்துகிற பொறியமைவு. இது பிழை கண்டுபிடித்தல், விரைவான மறுமொழி நேரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, பின்னர் அவற்றை மற்றொரு தரப்புக்குக் குத்தகைக்கு விடுகிறது.

value-added reseller : மதிப்பேற்று மறுவிற்பனையாளர் : வன்பொருள், மென்பொருள்களை மொத்தமாக வாங்கி, பராமரிப்பு போன்ற பயனாளர்களுக்கான சேவைகளையும்