பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

value added service

1519

variable


இணைத்து பொதுமக்களுக்கு மறுவிற்பனை செய்யும் ஒரு குழுமம்.

value added service : மதிப்புக் கூட்டிய சேவை : தகவல் தொடர்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். சாதாரணமாக அமைப்பில் அதற்கு முன்பு வழங்கப் பட்டதைவிட கூடுதலாக தகவல் தொடர்பு இணைப்பில் வழங்கப்படும் சேவைகள் அல்லது ஆரம்பங்களுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. பொது அமைப்பும் இதை வழங்கலாம் அல்லது பொது அமைப்பின் துணை ஒப்பந்தக்காரராக வேறொரு நிறுவனமும் இதை வழங்கலாம்.

value, null : வெற்று மதிப்பு; இல் மதிப்பு.

value list : மதிப்புப் பட்டியல் : தரவுத் தளம் போன்ற பயன்பாட்டுத் தொகுப்புகளில் ஒரு குறிப்பிட்ட தரவுவைக் கண்டறிவதற்கான தேடு சரமாகவோ (search string), அல்லது வடிகட்டி எடுக்கப்படும் வினவலுக்கான மதிப்புகளாகவோ பயன்படுத்தப்படும் மதிப்புகளின் பட்டியல்.

'value type : மதிப்பு இனம். சி மொழியில் int, char, float போன்ற மூல தரவு இனங்களும், struct, enum போன்ற தரவு இனங்களும் "மதிப்பு இனம்" எனப்படுகின்றன. சி# மொழியில் இத்தகு "மதிப்பு இனம்" தவிர class, interface, delegate ஆகியவை குறிப்பு இனம்" என வகைப்படுத்தப்படுகின்றன.

. vancouver. ca : . வான்கூவர். சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டு வான்கூவர் நகரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

vapourphase refrigiration : ஆவி வழி குளிரூட்டு முறை.

vapourware : ஆவிப்பொருள் : ஒரு உற்பத்தியாளர் அல்லது உருவாக்குபவரிடமிருந்து நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் வன்பொருள் அல்லது மென்பொருளைக் குறிப்பிடும் சொல். அது இருக்கிறது என்றே எவரும் நம்பமாட்டார்கள் என்பதால் அதை ஆவி என்று கூறப்படுகிறது.

variable : மாறியல்; மாறி; மதிப்புரு; மாறுவகை : ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது.