பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VCR

1522

vector display


VCR : விசிஆர் : Video Cassettee Recorder என்பதன் குறும்பெயர். ஒளிக்காட்சி நாடாவில் பதிவு செய்து, திரும்ப இயக்கும் எந்திரம். விசிஆர்கள், அடிப்படையில் அனலாக் பதிவு எந்திரமாக இருந்தாலும் ஏற்பிகளின் மூலம் கணினிக்கு உதவ எண் தரவுகளை அதில் பதிவு செய்ய முடியும்.

VDE : விடிஈ : 'Video Display Editor' என்பதன் குறும்பெயர். எரிக் மேயர் எழுதிய வேர்டு ஸ்டார், வேர்டு பர்ஃபக்ட் ஏற்பு சேர் பொருள் சொல் செயலகம்.

VDI : விடிஐ : Virtual Device Interface என்பதன் குறும்பெயர். சாதன இயக்கிகளை உருவாக்கும் அன்சி (ANSI) தர நிருணய படிவம்.

VDL : விடிஎல் (வியன்னா வரையறை மொழி) : வியன்னா வரையறை மொழி எனப் பொருள் படும் "Vienna Definition Language" என்பதன் தலைப்பெழுத்துச் சொல். இது சிலசமயம் செயல்முறைப்படுத்தும் மொழிகளின் சொற்றொடரியலை வரையறுக்கப் பயன்படுகிறது.

VDT : வி. டி. டீ : ஒளித் தோற்றக் காட்சி முனையம் : 'ஒளித்தோற்றக் காட்சி முனையம்' எனப் பொருள்படும் "Video Display Terminal" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது ஒரு காட்சித் திரையும், ஓர் உட்பாட்டு விசைப்பலகையும் கொண்டுள்ள ஒர் உட்பாட்டு/ வெளிப்பாட்டுச் சாதனம். CRT முனையம் என்பதும் இதுவும் ஒன்றே.

VDU விடியூ (காட்சி அலகு) : 'காட்சி அலகு' எனப் பொருள்படும் 'Virsual Display Unit' என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, சிலவகைத் திரைகளில் தரவுகளைக் காட்டும் ஒருபுறநிலைச் சாதனம்.

vector : ஏவரை ; நெறியம் ; ஒரு அளவுச் சரம் : 1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப் படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதியின்றி, 'அளவறுதியும் திசையறுதியும்' உடைய அளவுரு. 3. கணினியியலில், தனியொரு குறியீட்டின் மூலம் எந்த இனத்தின் அமைவிடத்தையும் அனுமதிக்கிற ஒரு தரவு கட்டமைவு. 4. வரைகலைத் தரவுகளைக் கோடுகளாக வரைந்து காட்டக்கூடிய எதிர்மின் கதிர்க் குழாய். 5. வரைவானில், இரு புள்ளிகளை இணைக்கும் ஒரு கோட்டின் கூறு.

vector display : நெறியக் காட்சி; ஏவரைக் காட்சி : திரையில்