பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vector font

1523

venn diagram


உருவங்களை வரைவதற்காக எலெக்ட்ரான் கற்றையைக் குறிப்பின்றி நகர்த்துகிற எதிர் மின் கதிர்க்குழாய்.

vector font L நெறிய அச்செழுத்து : கோடுகளால் இணைக்கப்பட்ட புள்ளிகளின் வரிசையினால் உருவாக்கப்படும் அச்செழுத்து. இதைப் பல்வேறு அளவுகளில் கூட்டி, குறைக்கலாம். plotter fonts' என்றும் அழைக்கப்படும்.

vector graphics : நெறிய வரைகலை : துண்மி விவரணைப் புள்ளிகளாக இல்லாமல் சமன்பாடு வரிசைகளாக இவை வரையப்படும். துண்மி விவரணைகள்போல் அல்லாது தர இழப்பு இல்லாமல் அவற்றைப் பெரிதாக்கலாம்.

vector pair : நெறிய இணை ; ஏவரை இணை : ஒர் ஏவரையின் எதிர்முனைகளாக அமைந்துள்ள தரவுப் புள்ளிகள்.

vector processing : சரச் செயலகம்.

vector processor : நெறியச் செயலகம் : ஒரே நேரத்தில் நெறியங்களின் (ஒரு பருமான வரிசைகள்) மீது பல கணக்கீடுகளைச் செய்கின்ற நிரல்களுடன் உருவாக்கப்பட்ட கணினி.

vectra : வெக்ட்ரா : எச். பி. நிறுவனத்தின் பீசி. வரிசை. தாங்குவனவாகவும், நம்பகத் தன்மையுடையனவாகவும் வெக்டர் இருப்பதைக் காணலாம்.

vendee : வாங்குநர் : வன்பொருள் அல்லது மென்பொருள் பொறியமைவினை வாங்குகிற ஆள் அல்லது வணிக நிறுவனம்.

vendor : விற்குநர் : 1. கணினிப் புறநிலைச் சாதனங்கள், நேரப்பகிர்வுச் சேவை, கணினிச் சேவைகள் ஆகியவற்றை விற்பனை செய்கிற நிறுமம் அல்லது வணிக நிறுவனம். 2. ஒரு வாங்குநர் பொருள்களை வாங்குவதற்கான ஒரு வழங்குநர்.

vendor code : விற்குநர் குறியீட்டெண்; வணிகர் குறியீட்டெண்.

venn diagram : வெண் வரைபடம் : கணங்களின் (sets) மீதான செயல்பாடுகளின் விடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம். ஒரு செவ்வகம் முழுதளாவிய கணத்தைக் குறிக்கும். அதனுள் இருக்கும் வட்டங்கள், பொருள்களின் கணங்களைக் குறிக்கின்றன. இரண்டு கணங்களுக்கிடையேயான உறவுமுறையை இரு வட்டங்களின் இடநிலையைக் கொண்டு அறியலாம். இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ்