பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

version

1525

vertical blanking interval


version : பதிப்பு : ஒரு குறிப்பிட்ட வன்பொருள் உருமாதிரியின் ஒரு குறிப்பிட்ட மென்பொருள் தயாரிப்பு. இது பொதுவாக ஏறுமுகமாக எண்ணிடப்படும். எடுத்துக்காட்டு : DOS 3. 3 என்பது ஒரு வட்டுச் செயற்பாட்டுப் பொறியமைவின் பிந்திய பதிப்பு.

version control : பதிப்புக் கட்டுப்பாடு : பெரிய மென்பொருள் திட்டத்தில் மூலக் குறியீட்டை மேலாண்மை செய்தல். பதிப்புக் கட்டுப்பாடு மென்பொருள் தரவுத் தளத்தை உருவாக்கி அது தொடர்பான நிரல் தொடராளர்கள் உருவாக்கும் நிரல் தொடரின் மாற்றங்களை கண்காணிக்க உதவுகிறது.

version number : பதிப்பு எண் : ஒரு மென்பொருளின் வெளியீட்டுக்கான அடையாளம். 2. 2 மற்றும் 2. 3-க்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகமாகவும் இருக்கலாம். ஏனென்றால் புதிய வெளியீடுகள் புதிய தன்மைகளை மட்டும் சேர்க்க வில்லை. தொல்லை தரும் பிழைகளையும் நீக்குகிறது. 3. 1 அல்லது 3. 11 என்பது முந்தைய பதிப்பில் உள்ள பிழைகளை மட்டும் நீக்கியது. ஆனால் 3. 1 மற்றும் 3. 2 என்பதில் முந்தைய பொருளை மேம்படுத்தியதாகும்.

verso : வெர்சோ; இடப்பக்கம் : இடதுகைப் பக்கம்.

vertex : கோண முனை : 1. ஒரு முக்கோணத்தின் இருபக்கங்களும் இணையும் புள்ளி. 2. ஒரு வரைபடக் கோட்டில் உச்ச அல்லது நீசப் புள்ளி.

vertical : நெடுக்கு செங்குத்து.

vertical application : செங்குத்துப் பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வணிகம் அல்லது தொழிலின் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புநிலைப் பயன்பாடு. (எ-டு) ஒர் உணவகத்தின் விலைப் பட்டி, அன்பளிப்புகள் மற்றும் கையிருப்புக் கணக்குகளைக் கவனிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்.

vertical bandwidth : செங்குத்து அலைக்கற்றை : ஒரு காட்சித் திரை எந்த வீதத்தில் முழுவதுமாகப் புதுப்பிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் அளவீடு. ஹெர்ட்ஸில் (Hz) குறிக்கப்படுகிறது. பெரும்பாலும் காட்சித் திரைகளின் செங்குத்து அலைக்கற்றை 45 ஹெர்ட்ஸ் முதல் 100 ஹெர்ட்ஸ்வரை இருக்கும்.

vertical blanking interval : செங்குத்து வெறுமையாக்க இடை