பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VESA

1528

V. Fast Class


10, 00, 000 வரை) அமைப்பிகளை ஒரே சிப்புவில் வைப்பதற்கான செய்முறை. பார்க்க : நான்காம் தலைமுறைக் கணினி, சிற்றளவு ஒருங்கிணைப்பு : நடுத்தர அளவு ஒருங்கிணைப்பு; பேரளவு ஒருங்கிணைப்பு; மீமிகைப் பேரளவு ஒருங்கிணைப்பு.

VESA1  : வேசா1 : விஎல்பாட்டை விரிவாக்கச் செருகுவாய்கள்.

VESA2 : வேசா2 : ஒளிக்காட்சி மின்னணுவியல் தரக்கட்டுப்பாட்டு கூட்டமைப்பு எனப் பொருள்படும் Video Electronics Standards Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிக்காட்சி மற்றும் பல்லூடக சாதனங்களின் தரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வன்பொருள் உற்பத்தியாளர்களையும் விற்பனையாளர்களையும் கொண்ட ஒர் அமைப்பு. காட்சித் தரவுத் தடம் (Display Data Channel-DDC), காட்சி மின்சார மேலாண்மை சமிக்கையாக்கம் (Display Power Management - Signalling - DPMS), வேசா உள்ளக்கப்பாட்டை (VESA Local Bus - VL Bus) போன்ற தர வரையறைகள் இவ்வமைப்பு உரு வாக்கியவற்றுள் அடங்கும்.

vesicular film : வெசிக்குலர் ஃபில்ம்.

vetting : செப்பமாக்கல்; தணிக்கை செய்தல் : பாதுகாப்பு அபாயங்களைக் குறைப்பதற்காக ஒர் ஆளின் பின்னணி பற்றி ஆராய்ந்தறியும் செய்முறை.

V. everything வி. எல்லாம்; வி. அனைத்தும் : சிசிஐடீடீ (இப்போது ஐடியு-டீ) வி. 34 வரையறைகள் மற்றும் வி. வேகம் (V. fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளைக் (மோடம்) குறிக்க, சில இணக்கி உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்ற சந்தைச் சொல். ஒரு வி. அனைத்தும் இணக்கி அதேவேகத்தில் செயல்படும் வேறெந்த இணக்கியுடனும் ஒத்தியைந்து செயல்படும்.

V. Fast Class : வி. வேக வகுப்பு; வி. வேக இனக்குழு : வழக்கிலிருந்த தர வரையறையான வி. 34 நெறிமுறை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு ராக்வெல் இன்டர்நேஷனல் நிறுவனம், இணக்கிகளில் செயல் முறைப்படுத்திய, ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பேற்ற தர வரையறை. வி. வேக வகுப்பு, வி. 34 ஆகிய இரண்டு இணக்கிகளுமே 28. 8 கேபிபீஎஸ் வேகத்தில் பரிமாறச் செய்யும் திறன்