பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VFAT

1529

. vi


பெற்றவை என்ற போதிலும் வி. வேக வகை இணக்கிகள் வி. 34 இணக்கிகளுடன் தரவுத் தொடர்பு கொள்ள முடியாது. வி. வேக இணக்கிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

VFAT : விஃபேட் : மெய்நிகர் கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் Virtual File Allocation Table stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95 இயக்கமுறைமையில், வட்டுகளை அணுகுவதற்கு, நிறுவத்தகு கோப்பு முறைமை மேலாளர் (installable File System Manager - IFS Manager) மென்பொருளின் கீழ் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை இயக்கி மென் பொருள் இது. விஃபேட், எம்எஸ்-டாஸ் வட்டுகளுடன் ஒத்தியல்பானது. ஆனாலும் அதைவிட வேகமாகச் செயல் படக்கூடியது. விஃபேட் 32-பிட் குறிமுறையைப் பயன்படுத்து கிறது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் இயங்கக்கூடியது. வட்டு இடைமாற்றாக விகேஷ் (Vcache) -ஐப் பயன்படுத்துகிறது. நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கிறது.

. vg : விஜி : ஒர் இணைய தள முகவரி அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

VGA : விஜிஏ : ஒளிக்காட்சி வரைகலைத் தகவி என்று பொருள்படும் Video Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இஜிஏ (EGA-Enhanced Graphics Adapter) தகவியின் அனைத்து ஒளிக் காட்சிப் பாங்குகளையும், கூடுதலான பல பாங்குகளையும் கொண்ட ஒர் ஒளிக்காட்சித் தகவி.

VHLL : விஹெச்எல்எல் : மீவுயர் நிலை மொழி என்று பொருள்படும் Very High Level Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

VHSIC-programme : விஎச்எஸ்ஐசி-செயல்முறை : அதிவேக ஒருங்கிணைப்பு மின் சுற்று வழிச் செயல்முறை. இது அரசு தனியார் தொழில் கூட்டுமுயற்சி. எதிர்கால ஆயுதங்களுக்கும் சாதனங்களுக்கும் பயன்படுத்த முற்போக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகளை இராணுவத் துறைக்கு வழங்குவது இதன் நோக்கம்.

. vi : விஐ : ஒர் இணைய தள முகவரி பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.