பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

1530

video camera


vi1 : விஐ1 : காட்சி எனப் பொருள்படும் visual என்பதன் சுருக்கம். யூனிக்ஸில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்ட முழுத்திரை உரைத் தொகுப்பி. மிகத் திறன்வாய்ந்த விசைப் பலகைவழிக் கட்டளைகளை யும் உள்ளடக்கியது. இயலறிவால் எளிமையாகப் புரிந்து கொள்ளும் கட்டளைகள் என்று சொல்ல முடியாது. இமேக்ஸ் (Emacs) போன்ற பல்வேறு நவீன உரைத் தொகுப்பிகள் வந்துவிட்டபோதிலும் யூனிக்ஸில் விஐ உரைத்தொகுப்பி இன்னும் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது.

vi2 : விஐ2 : யூனிக்ஸில் விஐ உரைத் தொகுப்பி மூலம் ஒரு கோப்பினைக் கையாள்வதற்கான கட்டளை. vi letter. txt எனக் கட்டளை அமைப்பின் letter. txt என்னும் கோப்புத் திரையில் விரியும்.

. victoria. ca : . விக்டோரியா. சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டு விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

video : ஒளிக்காட்சி; ஒளித் தோற்றம்; நிகழ்படம்; ஒளி வடிவம் : குறிப்பாக ஒளிப் பேழைக் காட்சி முனையத்திலுள்ள காட்சி.

video adaptor : ஒளிக்காட்சி ஏற்பி : ஒரு முகப்பின் கட்டுப்பாட்டு மின் சுற்று. காட்சிக்கான சமிக்கைகளை அனுப்புவது இதுவே.

video bandwidth : ஒளிக்காட்சிக் கற்றை அகலம்.

video board : ஒளிக்காட்சி பலகை.

video buffer : ஒளிக்காட்சி இடைநிலை நினைவகம் : திரையில் காட்டப்படும் தரவுவை வைத்துக் கொள்ள நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி. சான்றாக, நிற வரைகலை அட்டை 16. கி. நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. ஒளிக்காட்சி மின் சுற்று இடைநிலை நினைவகத்தின் உள்ளடக்கங்களைப் பிரித்து திரையில் காட்டுகிறது.

video camera : நிழல்படக் கருவி; ஒளிக்காட்சி படப்பிடிப்புக் கருவி : தொடர்ச்சியான படங்களை எடுத்துக் காட்டுவதற்கோ அல்லது பதிவு செய்வதற்கோ சமிக்கைகளை உருவாக்கும் படப்பிடிப்புக் கருவி, உருவங்களை தொடரான கோடுகளாக பிரித்து அது படங்களை பிடிக்கிறது. ஒவ்வொரு