பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video controller

1532

video display metafile



படிமங்களையும் தமக்குள் அனுப்பிக்கொள்ளும் வசதி கொண்ட தொலைக் கலந்துரையாடல். தொடக்க காலங்களில் தொடர்முறை ஒளிக்காட்சிகளையும், செயற்கைக்கோள் தொடர்புகளையும் பயன்படுத்தி இவ்வகைக் கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போது இறுக்கிச் சுருக்கப்பட்ட இலக்கமுறைப் படிமங்கள் விரிபரப்புப் பிணையம் அல்லது இணையம் வழியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. 55கே தரவுத் தொடர்புத் தடம் உறைநிலை-சட்ட ஒளிக்காட்சியை ஏற்கிறது. 1. 544 எம்பிபீஎஸ் (T1) தடத்தில் முழுஅசைவு ஒளிக்காட்சிப் படங்களை அனுப்பிவைக்க முடியும்.

video controller : ஒளிக்காட்சிக் கட்டுப்படுத்தி : சில வகையான ஒளிக் காட்சிப் பணிகளைக் கட்டுப்படுத்தும் சாதனம்.

video cassette : ஒளிக்காட்சிப் பேழை.

video digitizer : ஒளிக்காட்சி இலக்கமாக்கி : ஒர் ஒளிப்பேழை ஒளிப்பதிவுக் கருவியிலிருந்து வரும் சைகையினை இலக்க வடிவமாக மாற்றி, கணினிச் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கிற உட்பாட்டுச் சாதனம். இந்தச் சைகையினை கணினி மூலம் பகுப்பாய்வு செய்யலாம்; மற்றமைவு செய்யலாம்.

video disk : ஒளிக்காட்சி வட்டு : ஒர் ஒளிப்படப் பதிவை ஒத்திருக்கிற பிளாஸ்டிக் தகடு. இது, காட்சித்திரையில் தோன்றுகிற காட்சிப் பொருள்களை சேமித்து வைப்பதற்குக் குறைந்த செறிவுள்ள லேசர் கற்றைகளைப் பயன்படுத்துகிறது. ஒரு கணினி மூலம் பல ஒளிக்காட்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

video display : ஒளிக்காட்சித் திரை, ஒளித்தோற்றக் காட்சி சாதனம்; நிகழ்படக் காட்சி : கணினி வெளியீடான உரைப் பகுதி, வரைகலை போன்றவற்றைக் காட்சியாகக் காட்டுகின்ற (அச்சிடுவதன்று) திறன் பெற்ற ஒரு சாதனம்.

video display board ; நிகழ்படக் காட்சி அட்டை, ஒளித்தோற்றக் காட்சி அட்டை : கணினியின் முதன்மை முறைமைப் பலகையின் அங்கமாக இல்லாமல், ஒரு விரிவாக்க அட்டையாக இருக்கும் ஒளிக்காட்சித் தகவி.

video display metafile : ஒளித் தோற்றக் காட்சி மீஇயல்கோப்பு : படிமங்களை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு அனுப்பி வைக்கத்