பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video graphics board

1534

video monitor


video graphics board : ஒளிக்காட்சி வரைகலைப் பலகை : ஓர் ஒளிக்காட்சித்திரையில் வரைகலைப் படிமங்களைக் காண்பிக்க ஒளிக்காட்சிச் சமிக்கைகளை உருவாக்குகின்ற ஒர் ஒளிக்காட்சித் தகவி.

video input camera : ஒளிக்காட்சி உட்பாட்டு ஒளிப்பதிவுக் கருவி : ஒரு கணினியின் நினைவகத்தில், (ஒளிப்படங்கள், இயல்பு வாழ்க்கைச் சூழல்கள், ஒவியங்கள்) புள்ளி உருக்காட்சிகளாக மாற்றுகிற ஒளிப்பேழை ஒளிப்பதிவுக் கருவி. இலக்கமாக்கப்பட்ட உருக்காட்சிகளை ஒரு காட்சித்திரையில் காட்டலாம் அல்லது வரைகலை அச்சுப்பொறிமூலம் காகிதத்தில் அச்சடிக்கலாம்.

videoline mail : ஒளிக்காட்சி அஞ்சல், நிகழ்பட அஞ்சல், ஒளிப்பட அஞ்சல்.

video memory : ஒளிக்காட்சி நினைவகம் : ஒளிக்காட்சித் தகவி அல்லது ஒளித்தோற்றத் துணை அமைப்பில் ஒரு காட்சிப் படிமம் உருவாக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நினைவகப் பகுதி. இப்பகுதியை அணுகுவதற்கு எழுது/படிப்பு செயலியைவிட ஒளிக்காட்சித் துணை அமைப்புக்குத்தான் முன்னுரிமை அதிகம். எனவே, முதன்மை நினைவகத்தை அணுகுவதைவிட ஒளிக்காட்சி நினைவகத்தைப் புதுப்பித்தல் மெதுவாகவே நடைபெறும்.

video mode : ஒளிக்காட்சிப் பாங்கு : ஒரு கணினியின் ஒளிக்காட்சித் தகவியும் திரையகமும் இணைந்து படிமங்களைத் திரையில் காட்டும்முறை. பெருமளவு புழக்கத்தில் உள்ளவை உரைப்பாங்கும் வரைகலைப் பாங்கும். உரைப்பாங்கினில் எழுத்து, எண், குறிகள் போன்ற குறியீடுகள் எதுவும் படப்புள்ளி களால் திரையில் வரையப்படுவதில்லை. ஆனால், வரைகலைப் பாங்கினில் எழுத்தாக இருந்தாலும் படமாக இருந்தாலும் அனைத்துத் திரைப் படி மங்களுமே படப்புள்ளிகளின் தோரணிகளாக ஒரு நேரத்தில் ஒரு புள்ளிவீதம் திரையில் வரையப்படுகின்றன.

video monitor : ஒளிக்காட்சித் திரை : செயல்முறையில் ஒரு தொலைக்காட்சி போன்ற சாதனம். இதில் அலைவரிசைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வசதி இல்லை. ஒளிக் காட்சி முனையை விசைப்பலகை போன்ற ஒரு புறநிலை ஆதாரத்திலிருந்து இது பட சைகைகளைப் பெற்றுக் கொள்கிறது.