பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtual desktop

1538

virtual device driver



இன்டெல் 386 மற்றும் மேம்பட்ட செயலிகள் உள்ள கணினிகளில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்ற பல்பணிச் சூழலில் எம்எஸ்-டாஸ் நிரல்கள் விரிவாக்கப்பட்ட நினைவகத்தை அணுக அனுமதிப்பதற்கான வரன்முறை.

virtuai desktop : மெய்நிகர் முகப்புத் திரை : விண்டோஸ் பணிச்சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது சில பயன்பாட்டுத் தொகுப்புகளின் சாளரம் திரையின் முழுப்பகுதியிலும் பரவியிருக்கும். அப்போது விண்டோஸின் முகப்புத்திரை (desktop) பின்னால் மறைந்திருக்கும். இதுபோன்ற தருணங்களில் முகப்புத் திரையிலுள்ள குருவழி (shortcut) / பயன்கூறுகளை (பtilities) அணுகுவதற்கு உதவிசெய்யும் நிரல். முகப்புத் திரை மேம்படு நிரல்.

virtual device : மெய்நிகர் சாதனம் : பருநிலையில் நிலவாத ஆனால் நிரல்கள் மூலம் குறிப்பிடப்படும் ஒரு சாதனம். (எ-டு) மெய்நிகர் நினைவகம் என்பது, முதன்மை நினைவகத்தில் இடமில்லாதபோது நிலைவட்டில் ஏற்படுத்தப்படும் தற்காலிக நினைவகப் பகுதி. இதேபோல, நினைவகத்தில், ஒரு மெய்நிகர் வட்டுப் பகுதியை உருவாக்க முடியும்.

virtual device driver : மெய்நிகர் சாதன இயக்கி : விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் ஒரு வன்பொருள் அல்லது மென்பொருள். வளத்தினை மேலாண்மை செய்கின்ற ஒரு மென்பொருள். ஒரு வளம், முதல் அணுகலுக்கும் அடுத்த அணுகலுக்கும் இடையே சில தகவல்களைத் தக்கவைத்துக் கொள்கிறது எனில் (எ-டு : ஒரு வட்டுக் கட்டுப்படுத்தியில் நிலைமைத் தகவல் மற்றும் இடையகங்கள்), அதற்கான மெய்நிகர் சாதன இயக்கி ஒன்று இருக்க வேண்டும். பொதுவாக, மெய்நிகர் சாதன இயக்கிகள் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும். முதல் எழுத்து V ஆகவும் கடைசி எழுத்து D ஆகவும் இருக்கும். நடு எழுத்து சாதன வகையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக D என்பது திரைக்காட்சி (Display), P என்பது அச்சுப்பொறி (Printer), T என்பது நேரங்காட்டி (Timer) என இருக்கும். குறிப்பிட்ட சாதனவகை இப்போதைக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதது எனில் x என இருக்கும். அதாவது, மெய்நிகர் சாதன இயக்கி Vxd என இருக்கும்.