பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

binding time

153

biomic chips


கொடுத்தல். 2. ஒரு மாறிலி அல்லது அளவு கோலுக்கு ஒரு வகை மதிப்பை அளித்தல். 3. தொகுதிகளை ஒன்றாக இணைத்தல்.

binding time : பிணைக்கும் நேரம் : ஒரு தொகுப்பு அடையாள எண் அல்லது முகவரியை

எந்திர மொழி வடிவத்தில் மாற்றும் நிலை.

Bin Hex : பின்ஹெக்ஸ் : 1. இருமத் தரவு கோப்புகளை, மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுக் கட்டுரையாக மற்றொரு கணினிக்கு அனுப்புவதற்கு உகந்த வகையில் ஆஸ்கி (ASCII) உரைக் கோப்பாய் மாற்றுவதற்கான குறிமுறை. இணையத்தில் ஆஸ்கிக் குறியீட்டு வடிவில் தகவல் அனுப்ப வேண்டிய தேவைகளுக்கு இம்முறை உகந்தது. பெரும்பாலான மேக் (Mac) கணினிப் பயனாளர்கள் பின் ஹெக்ஸ் முறையை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். 2. ஒர் இருமத் தரவுக் கோப்பை, ஆஸ்கி உரைக் கோப்பாகவும், ஒர் ஆஸ்கிக் கோப்பை இரும வடிவக் கோப்பாகவும் மாற்றித் தருகின்ற ஆப்பிள் மெக்கின் டோஷ் நிரல்.

biochip : உயிரியச் சிப்பு : உயிருள்ள பொருள்களை நுண்சிப்புகளாக மாற்ற கணினி

தொழிலின் முயற்சி. இப்போதைய சிலிக்கான் சிப்புகளில் இருந்து 500 மடங்கு அதன் அளவு குறையும் என்று சில மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், இதை செய்ய 80 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலார் சிலர் கூறுகின்றனர்.

biocomputer : உயிரியக் கணினி : உயிரியச் சிப்புகளில் தனது மையச்செயலகம் அல்லது நினை வகத்தைச் சேர்த்து வைக்கும் கணினி.

biodata : தகுதிக்குறிப்பு; தன் விவரக் குறிப்பு.

biological neuron : உயிரியல் நரம்பகம் : 0. 01 மி. மீ. நீளமுள்ள உயிரியல் நரம்பு அறை.

biomechanics : உயிரிய எந்திரவியல் : இயக்கத்தின் உயிர்க்கூறு கொள்கைகளை ஆய்தல். விளையாட்டு வீரர்கள் மற்றும் பந்தயக் குதிரைகளின் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டும் உயிர் எந்திரவியல் பயன்பாடுகள் செய்யப்படுகின்றன.

biometrics : உயிரளவை : தனி உடல் அமைப்புகளை அளக்கும் அறிவியல். சில பாதுகாப்பு முறைகள் மற்றும் தடய அறிவியல் ஆராய்ச்சிகளில் பயன் படுத்தப்படுகிறது.

biomic chips : உயிரியல் சிப்பு : உயிரியல் சில்லு,