பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtual peripheral

1541

virtual real mode


nous Transfer Mode-ATM) பிணையம் வழியாக, ஒன்றாக இணைக்கப்படும் மெய்நிகர் தடங்களின் பிணைப்பை மெய்நிகர் பாதை என்று கூறலாம்.

virtual peripheral : மெய்நிகர் புறச்சாதனம் : இயக்க அமைப்பினால் செய்து காட்டப்படும் வெளிப்புறச்சாதனம். சான்றாக, வட்டுக்கு அச்சிடும் செயல்முறை.

virtual printer : மெய்நிகர் அச்சுப்பொறி : அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும் ஒரு வெளியீட்டுத் தரவுவை, அச்சுப்பொறி கிடைக்கும்வரை (தயாராகும் வரை) ஒரு கோப்பினில் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. பெரும்பாலான இயக்க முறைமைகளில் இவ்வசதி உள்ளது.

virtual private network : மெய்நிகர் தனியார் பிணையம்.

1. இணையம் போன்ற பொதுப்பிணையத்தில் இணைக்கப்பட்ட கணுக்கணினிகளின் தொகுதி. மறையாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெளியார் எவரும் அத்துமீறி நுழையா வண்ணம், ஒரு தனியார் பிணையம் போன்றே பாதுகாப்பான முறையில் தமக்குள்ளே தரவுகளைப் பரிமாறிக் கொள்ளல். 2. வேறொரு பிணையத்தின்மீது நிலையான மெய்நிகர் மின்சுற்றுகளின் வழியாக அமைக்கப்பட்ட ஒரு விரிபரப்புப் பிணையம். குறிப் பாக, ஏடிஎம் அல்லது சட்டகம் (frame) போன்ற தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த பிணையம்.

virtual processing : மெய்நிகர் செயலாக்கம் : ஒவ்வொரு தரவு பொருளுக்கும் ஒரு செயலகம் இருப்பது போன்று காட்டப்படும் இணைச்செயலக நுட்பம். இருப்பதற்கு மேல் பல மெய்நிகர் செயலகங்கள் தரவுப் பொருள்களுக்காக இது உருவாக்கும்.

virtual processor : மெய்நிகர் செயலகம் : மெய்நிகர் செயலாக்க அமைப்பில் உள்ள போலியாக அமைக்கப்பட்ட செயலகம்.

virtual reality : மெய்நிகர் நடப்பு; மெய்த்தோற்ற எதார்த்தம்.

virtual reality helmet : மெய்நிகர் நடப்புத் தலைக்கவசம்.

virtual real mode : மெய்நிகர் உண்மைப் பாங்கு : இன்டெல் 80386 (எஸ்எக்ஸ் மற்றும் டிஎக்ஸ்), மற்றும் அதைவிட மேம்பட்ட நுண்செயலிகளில் இருக்கும் ஒரு பண்புக்கூறு.