பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtual root

1542

virtual server


ஒரேநேரத்தில் பல்வேறு 8086 (உண்மைப் பாங்கு) சூழல்களை உருவாக்கிக்காட்ட முடியும். ஒவ்வொரு மெய்நிகர் 8086 சூழலுக்கும் தேவையான மெய்நிகர் பதிவகங்கள் (registers), மெய்நிகர் நினைவகப் பகுதி ஆகியவற்றை இவ்வகை நுண்செயலிகள் வழங்குகின்றன. ஒரு மெய்நிகர் 8086 சூழலில் செயல்படும் ஒரு நிரல், பிற மெய்நிகர் 8086 சூழல்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்படுவதுடன், கணினியின் முழுக் கட்டுப்பாடும் இந்த நிரலின் கீழ் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தையும் தருகிறது.

virtual root : மெய்நிகர் மூலம் : ஹெச்டீடீபீ அல்லது எஃப்டீபீ வழங்கன் போன்ற இணைய வழங்கனோடு பயனாளர் ஒருவர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, காண்கின்ற மூலக் கோப்பகம். மெய்நிகர் மூலம் என்பது உண்மையான மூலக்கோப்பகத்தைச் சுட்டுகின்ற ஒரு சுட்டு ஆகும். மூலக்கோப்பகம் வேறு கணினியில் இருக்கலாம். மெய்நிகர் மூலம் வழியாகக் கிடைக்கும் நன்மை என்னவெனில், ஓர் இணையதளத்துக்கு மிக எளிதாக ஓர் யூஆர்எல் உருவாக்க முடியும். யூஆர்எல்லுக்கு எவ்விதத் தீங்குமின்றி மூலக்கோப் பகத்தை வேறிடத்துக்கு மாற்ற முடியும்.

virtual screen : மெய்நிகர் திரை : கணினித் திரையின் எல்லைக்கு அப்பாலும் திரையிடப் பயன் படுத்திக்கொள்ளும் பகுதி. மிகப்பெரிய அல்லது மிகப்பல ஆவணங்களைக்கையாள இக்கூடுதல் பரப்பு பயன்படுகிறது.

virtual server : மெய்நிகர் வழங்கன் : ஒரு ஹெச்டீடீபீ வழங்கன் கணினிக்குள் இருந்து செயல்படும் ஒரு மெய்நிகர் கணினி. ஆனால் பயனாளரைப் பொறுத்தவரை ஒரு தனி ஹெச்டீடீபீ வழங்கனாகவே காட்சியளிக்கும். ஒரே ஹெச் டீடீபீ வழங்கனில் பல மெய்நிகர் வழங்கன்கள் இருக்க முடியும். ஒவ்வொன்றும் தத்தமது நிரல்களை இயக்கிக்கொள்ள முடியும். ஒவ்வொன்றும் உள்ளிட்டு, வெளியீட்டுச் சாதனங்களைத் தனிப்பட்ட முறையில் அணுக முடியும். ஒவ்வொரு மெய் நிகர் வழங்கனும் தனிக்களப்பெயரையும் ஐபி முகவரியையும் கொண்டிருக்கும். பயனாளருக்கு அது தனிவலைத் தளமாகவே தோற்றமளிக்கும். பல இணையச் சேவையாளர்களும், தத்தமது தனி களப்பெயர்களை வைத்துக்கொள்ள