பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

visual Basic, scripting Edition

1545

visualization


பேசிக் விண்டோஸ் 95/98 பயன்பாடுக்ளுக்கு நிரல் எழுதப் பயன்படுத்தப்படும் விசுவல் பேசிக் மொழியின் ஒரு குறுகிய வடிவம். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள பல்வேறு பயன்பாடுகளில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

Visual Basic, Scripting Edition : விசுவல் பேசிக், உரைநிரல் பதிப்பு : பயன்பாடுகளுக்கான விசுவல்பேசிக் நிரலாக்க மொழியின் ஓர் உட்பிரிவு. இணையம் தொடர்பான நிரலாக்கத்துக்கென உருவாக்கப்பட்டது. ஜாவா ஸ்கிரிப்ட் போன்றே விசுவல் பேசிக் உரைநிரல் பதிப்பின் கட்டளைகளும் ஒரு ஹெச்டீ எம்எல் ஆவணத்தில் உட்பொதிவாக இருக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வலை உலாவி, இதன் நிரல்களை புரிந்து செயல்படுத்தும். வி. பி ஸ்கிரிப்ட், விசுவல் பேசிக் ஸ்கிரிப்ட் என்றும் அழைக்கப்படும்.

Visual C++ : விசுவல் சி++ : விண்டோஸில் செயல்படக்கூடிய, சி++ நிரலாக்க மொழியின் பயன்பாட்டு உருவாக்க வடிவம். மைக்ரோ சாஃப்ட் வெளியிடும் விசுவல்ஸ்டுடியோ கூட்டுத்தொகுப்பின் ஓர் அங்கம். காட்சியடிப்படையான நிரலாக்கப் பணிச்சூழலை வழங்குகிறது.

visual display : காட்சித்திரை : ஒரு காட்சித்திரையில் படம் அல்லது வரைபடம் காட்டுதல் அல்லது ஒரு வரைவி மூலம் ஒரு வரைபடம் உருவாக்கிக் காட்டுதல் போன்று தரவு களைக் காட்சியாக உருவாக்கிக் காட்டுதல்.

visual display terminal : புலன்காட்சி முனையம் : திரையில் விசையிடப்பட்ட உள்ளீடு மற்றும் செயலக வெளியீட்டைக்காட்டும் திறனுள்ள சாதனம்.

visual display unit : காட்சித் திரையகம்.

visual display unit, cathode ray tube : எதிர்மின்வாய் கதிர்க்குழாய் காட்சித் திரையகம்.

visualization : பார்க்கும் பொருளாக்கல் : கணினி வரைகலையில், எண் வடிவில் விளங்கிக் கொள்ள கடினமாக உள்ள போக்குகளை மனிதர்கள் கண்டு கொள்ள அனுமதிக்க எண்முறை தரவுகளை படவடிவமாக மாற்றுதல். கொள்கையளவிலும், நடைமுறையில் ஆராய்ச்சி சூழ்நிலைகளிலும் இது குறிப்பாக பயன்படுத்தப் படுகிறது.