பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

voder-dpeech

1548

voice frequencies


voder-speech synthesizer : பேச்சுருவாக்கியின் பெயர்.

voice answer back : குரல் பதிலுரை : குரல் மறுமொழி : கட்டளைகள், வினவல்களுக்குப் பதிலுரையாக ஒரு கணினி, ஏற்கெனவே ஒலிப் பதிவு செய்யப்பட்ட செய்திகளைப் பயன் படுத்துதல்.

voice-capable modem : குரலறி திறனுள்ள இணக்கி : தன்னுடைய தரவு கையாளும் செயல்பாடுகளோடு குரல்வழிச் செய்திகளையும் ஏற்கும் திறனுள்ள ஒரு இணக்கி.

voice channel : குரல் வழித் தடம் : மனிதக் குரலைக் கொண்டு செல்லும் துணை வழித்தடம் அல்லது ஒளிபரப்பு வழித்தடம்.

voice coil : குரல் சுருளை : வேகமாக அணுகவும் நிலை வட்டு இயக்கி படி/எழுது முனை நுட்பம். வழக்கமான இயக்கிகளைவிட இது அதிகம் செலவாகக்கூடியது. ஒலி பெருக்கியில் உள்ளதைப் போன்ற தொழில் நுட்பமே இதிலும் பயன்படுத்தப் படுகிறது. கொடுக்கும் சமிக்கையின் சக்தியைப் பொறுத்து, அந்த சுருளை ஒரு குறிப்பிட்ட தூரம் நகர்ந்து தேவைப்படும் தரவு சேமிப்பு வழித் தடத்தின் மேல் சரியாக நிற்கும்.

voice communications : குரல் செய்தித் தொடர்பு;பேச்சுத் தொடர்பு : மனிதரின் கேள்விச் செல்லைக்குள் ஒலியை அனுப்புதல். குரல் அல்லது ஒலியை ஒரு ஒத்த சொல் அல்லது இலக்கச் சைகைகளாக அனுப்பலாம்.

voice frequencies : குரல் அலைவரிசைகள் : நாம் பேசும்போது, நமது குரல் நாண்கள் அதிர்ந்து ஓசையை உருவாக்கி ஒரே அளவில் வாய்க்கும், தொண்டைக்கும் மூக்குக்கும் தொண்டைக் குழி வழியாகப் போய்ச் சேர்கிறது. இதில் ஏற்படும் ஒலிகள் பேச விரும்பும் ஒலியின் தன்மைகளுக் கேற்ப ஒலி அலைகளை ஏற்படுத்துகின்றன. உயி ரெழுத்துகளை ஒலிக்க அதிக சக்தி தேவைப் படுகிறது. மெய்யெழுத்துகளுக்கு உதடுகள், நாக்கு, பற்கள் செயல்படுவதால் குறைந்த சக்தியே போது மானது என்பதுடன் அதிக அதிர்வுகளும் ஏற்படுத்துகின்றன. இதன் அலைவரிசைகள் 100 முதல் 2, 000 ஹெர்ட்சுகளாகும். குரலின் தொனி யானது குரல் நாண்களின் அடிப்படை அலை வரிசைகளைப் பொறுத்தது. இது பெண்களுக்கு