பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bionics

154

birefringence


bionics : உயிரியம் : உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல்.

BIOS : பயாஸ் : அடிப்படை உள்ளீட்டு-வெளியீட்டு அமைப்பு எனப் பொருள்படும் Basic Input/output System என்பதன் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட கணினிக்கு இசையுமாறு மாற்றப்படும் அமைப்பின் பகுதி.

Bios data area : பயாஸ் தரவுப் பகுதி : 00404 : 0000-வில் தொடங்கும் நினைவகத்தின் பகுதி. இங்கு தான் பயாஸ்நிலை பற்றிய தரவுவையும் விசைப் பலகையின் இடைநிலை நினைவகத்தையும் வைத்திருக்கிறது.

biosensors : உயிர் உணரிகள்.

bipolar : இருதுருவ : சிலிக்கான் படிமங்களிலிருந்து ஒருங்கிணைந்த மின்சுற்றுகளை உருவாக்கும் மிகவும் புகழ்பெற்ற அடிப்படை முறை. இருதுருவ என்றால் இரண்டு துருவங்களை உடையது என்று பொருள். இதற்கு முந்தைய மோஸ்ஃபீல்டுக்கு மாறானது. மோஸ் ஃபீல்டில் ஒரே துருவம்தான் உண்டு. ஒரே திசையில்தான் மின்சாரம் பாயும் இருதுருவ டிரான்சிஸ்டர்களில் இரண்டு திசைகளிலும் உள்ள முகப்புகளை நோக்கி மின்சாரம் பாயும். ஒரு துருவம் என்பதற்கு மாறானது.

bipolar read only memory : இரு துருவ படிக்க மட்டுமான நினைவகம்.

bipolar transmission : இரு துருவ செய்தி பரப்புகை : பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சமிக்கைகளாக மாற்றி மாற்றி அனுப்பும் இலக்க முறை தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம்.

biquinary code : பிக்குனரி பதின்மக் குறியீடு : இருமக் குறிமுறை துண்மி மதிப்புள்ள குறியீடு. பதின்ம எண்களைக் குறிப்பிடுவது. பிழை திருத்தத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பதின்ம எண் 5-ஐக் குறிக்க மூன்று துண்மிகள்போதும். மற்ற 5துண்மிகளும் பதின்ம எண் 0-வை 4-ன் மூலம் குறிப்பிடுகின்றன.

birefrin gence : இரட்டை பதின்ம அலை வீச்சு : ஒரு படிகத்தைப் பயன்படுத்தி ஒளியை இரண்டு அலைவரிசைகளில் பிரித்து இரண்டு வெவ்வேறு வேகங்களில் ஒன்றுக் கொன்று

செங்கோணத்தில் போக செய்தல். எல்சிடி காட்சித் திரையில் நிறத்தை வடிகட்டி அனுப்ப இது பயன்படுகிறது.