பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

voice processing

1550

volatile storage


கணினி சார்ந்த நிரல்,தன் சேவை எரிவாயு நிலையங்கள் போன்ற பல்வேறு பயன்பாடு களுக்கு உதவுகிறது.

voice processing:குரல் செயலாக்கம்: குரலைக் கணினி மூலம் கையாளுதல்.இதில் குரல் சேமிப்பும் அனுப்புதலும்,குரல் பதிலளிப்பு, குரல் கண்டறிதல் மற்றும் சொற்பகுதி முதல் பேச்சுத் தொழில் நுட்பம்வரை காணப்படும்.

voice recognition:குரல் கண்டறிதல்: மனிதக் குரலைக் கண்டுகொள்ள கணினி வன் பொருள்/மென்பொருளுக்குத் திறனளிக்கும் ஓரளவு புதிய தொழில்நுட்பம்.கணினியில் சேர்ப்பதற்கேற்ற மின்னணு வடிவில் பேசப்படும் தரவுகளை நேரடியாக மாற்றுதல்.

:voice recognition software:குரலறி மென்பொருள்.'

voice recognition system:குரல் காண் பொறியமைவு:குரலறி அமைப்பு: பயன்பாட்டாளரின் குரலையும் சொற்களையும் அடையாளங்கண்டு புரிந்து கொள்ளக்கூடிய பொறியமைவு.

voice recorder:குரல் பதிப்பி.

voice response:குரல் மறுமொழி: பேச்சு வடிவிலான கணினி வெளிப்பாடு.

voice synthesis:குரல் ஒருங்கிணைப்பு: கணினியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள ஒலித் தோரணிகளை,ஒலிபெருக்கிமூலம் ஒலிபரப்பக்கூடிய சொற்களாக ஒருங்கிணைக்கும் கணினியின் திறம்பாடு.

voice synthesizer:குரல் இணைப்பாக்கி.

void:அற்றநிலை.

volatile:அழியக்கூடிய:மறையக்கூடிய.

volatile file:விரைவுக்கோப்பு;மாற்றமிகு கோப்பு:புதிய புதிய பதிவேடுகளைப் புகுத்து வதும்,பழைய பதிவேடுகளை நீக்குவதும் அதி வேகத்தில் நடைபெறும் ஒரு கோப்பு.இதில் அணுகுநேரம் மாறக்கூடியது.

volatile memory:நிலையா நினைவகம்; அழியும் நினைவகம்,மறையும் நினைவறை: கணினியின் அடிப்படை நினைவகம்.மின்சாரம் நிறுத்தப்பட்டால் தன்னுடைய தரவுகளை எல்லாம் கணினி இழந்து விடும் என்பதை உணர்த்தும் சொல் என்பதால் இச்சொல் சரியாகவே அமைந்துள்ளது.

volatile storage:நிலையா சேமிப்பு: விரைவுச் சேமிப்பகம்:பொறியமைவிலிருந்து மின் விசை நீக்கப்பட்டால் உள்ளடக்