பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VT-52

1554

vulnerability


vulnerability||1554|}}


விளக்க மொழி. பயனாளர், வரைகலைப் படிமங் களுடனும், பொருட்களுடனும் சேர்ந்து நடமாடலாம். 1994இல் மார்க் பெஸ்ஸி, டோனி பாரிசின் (Mark Pesce And Tony Parisin) ஆகியோரால் உரு வாக்கப்பட்டது. சிலிக்கான் கிராஃபிக்ஸ் நிறுவன இன்வென்டார் கோப்பு வடிவாக்கத்தின் உட்பிரிவாகும் இது. விஆர்எம்எல் கோப்புகளை ஓர் உரைத்தொகுப்பியில் எழுத முடியும். விஆர்எம்எல் கோப்புகள் ஒரு ஹெச்டீடீபீ வழங்கனில் சேமிக்கப்படுகின்றன. இவற்றுக்கான தொடுப்பு களை ஒரு ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் சேர்ப்பதன்மூலம் பயனாளர் இக்கோப்புகளை நேரடியாக அணுகமுடியும்.

VT-52, TV-100, VT-200 : விடீ-52 : விடீ-100 : விடீ-200 : டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் தயாரித்து வெளியிட்ட முனையங்களின் மாதிரி எண்கள். செல்வாக்குப் பெற்ற கட்டுப்பாட்டுக் குறிமுறைகள் இந்த முனையங்களில் பயன் படுத்தப்பட்டன. ஒரு நுண் கணினியை இதுபோன்ற முனையங்களாகச் செயல்படுமாறு மாற்றியமைக்க அதற்குரிய மென்பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.

WTO : விடீடி : மெய்நிகர் நேரங்காட்டிச் சாதன இயக்கி என்று பொருள் தரும் Virtual Timer Device Driver என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

. vt. us . வி. டீ. யுஎஸ் : ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டு வெர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

. vய : . வியு : ஓர் இணையதள முகவரி வானுவாட்டு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

vulnerability : வடுப்படும் நிலை : பாதுகாப்பு இடர்ப்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடியதாக ஒரு கணினியிலுள்ள பலவீனம்.