பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

waisindex

1556

wand


பட்டியலில் தேவையற்ற தரவுகளும் இடம் பெறுவதுண்டு. வெய்ஸ் வழங்கனில் தரவுவைத் தேட பயனாளர்கள் வெய்ஸ் கிளையன் மென்பொருளைப் பயன்படுத்தவேண்டும்.

wais index : வெய்ஸ் சுட்டுக்குறிப்பு : 1. வெய்ஸ் (WAIS-Wide Area Information Server) வினவல் மென்பொருள் மூலமாக, உரைக் கோப்புகளை அணுகுவதற்கு சுட்டுக்குறிப்பு பட்டியலை உருவாக்கும் யூனிக்ஸ் பயன்கூறு. 2. வெய்ஸ் வழங்கனை அணுகுவதற்கான ஒரு யூஆர்எல் முகவரி wais : //hostport/database என்பது போல் அமையும்.

wait : காத்திரு : ஒரு டிபேஸ் கட்டளை. பயனாளர் விசையை அழுத்தினால் ஒழிய நிரல் தொடர் இயக்கப்படுவது தள்ளிப்போகச் செய்வது. அதன் விளைவான விசைப்பதிவை குறிப்பிட்ட மாறிலியில் எழுத்துச் சரமாக சேமிக்கப்படுகிறது.

wait state : காத்திருப்பு நிலை : காத்திருக்கும் நிலை : மையச் செயலகம் நிரல்களை நிறைவேற்றாமல், வாளாதிருக்கும் நிலை.

wait time : காத்திருப்பு நேரம் : மற்ற நடவடிக்கைகள் முடிவுறுவதற்காகக் காத்திருக்கும் ஒரு செயல்முறை அல்லது கணினி.

wallet PC : பணப்பைக் கணினி : சட்டைப்பையில் வைத்துக் கொள்ளும் அளவுள்ள சிறிய அட்டை வடிவிலான கணினி. பணப்பை போன்றே பயன்பாடு உடையது. இதை வைத்துள்ள நபரின் மெய்நிகர் (virtual) அடையாளத்தைக் கொண்டிருக்கும். மேலும், பணம், பற்று அட்டைகள் மற்றும் பிற இன்றியமையாத் தகவல்களையும் கொண்டிருக்கும். நடமாடும் தகவல் மூலமாகவும் மற்றும் தகவல் தொடர்புக் கருவியாகவும் விளங்கும். இதுபோன்ற சாதனம், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தயாரிப்பில் உள்ளது.

wall paper : சுவர் தாள் : சாளரச் (window) சொல். சாளரத்துக்குப் பின்னுள்ள அமைப்பைக் குறிப்பிடுவது.

walk through : உலா : ஊடு நடை, உலா வருதல்.

WAM வாமி : உலக மருத்துவத் தகவலியல் சங்கம் என்று பொருள்படும் World Association for Medical Informatics என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

wand : வருடுகோல்; உள்ளிடு கோல், எழுத்தாணி : கணினியில்