பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bisam

155

bit block transfer


bisam : பைசாம் : அடிப்படை சுட்டுறு வரிசைமுறை அணுகுமுறை எனப் பொருள்படும் Basic Indexed Sequential Access Method என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர்.

bistable : இருநிலை : 1 அல்லது 0, இயக்கும் அல்லது நிறுத்தும். இவை இரண்டு நிலைகளில் ஒன்றை மட்டும் ஏற்கும் வன்பொருள் சாதனம்.

bistable circuit : இருநிலை மின்சுற்று : இரண்டே இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒன்றில் நிலைக்கும் மின்சுற்று. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற, மின் சுற்றுக்கு வெளியிலிருந்து தூண்டப்பட வேண்டும். ஓர் இரு நிலை மின்சுற்று, ஒரு துண்மி (பிட்) தகவலை இருத்தி வைக்கும் திறனுடையது.

bistable device : இருநிலைச் சாதனம் : நிறுத்துதல் அல்லது இயக்குதல் ஆகிய இரண்டு நிலைகள் மட்டுமே உள்ள சாதனம்.

bistable magnetic core : இரு நிலை காந்த உள்ளகம்.

bi-state : இருநிலை : இரண்டு நிலைகள் மட்டும் இருக்கும் போது அவற்றில் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கணினி உறுப்புகளின் நிலை.

bit : பிட் : துண்மி : இருநிலைத் துணுக்கு : இரும இலக்கம் : 1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0-வைக் குறிக்கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய தகவலின் மிகச் சிறிய அலகு. 3. பல துண்மிகள் சேர்ந்தே ஒரு எண்மியில் அல்லது ஒரு கணினி சொல் உருவாகிறது.

bit block : துண்மிக் தொகுதி : பிட் தொகுதி : கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஓர் அலகாகக் கருதப்படுகின்றன. படப் புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் குறிக்கும் துண்மிகளின் தொகுப்பு என்பதால் இப்பெயர் பெற்றது. நிரலர்கள் துண்மித் தொகுதிகளையும், துண்மித் தொகுதி இடமாற்ற நுட்பத்தையும் பயன்படுத்தி, கணினித் திரையில் மின்னல் வேகத்தில் உருவங்களை அடுத்தடுத்துத் திரையிடுவதன் மூலம், பட உருவங்கள் இயங்குவது போலச் செய்ய முடியும்.

bit block transfer : துண்மித் தொகுதி இடமாற்றம் : வரைகலைத் திரைக்காட்சியிலும், இயங்கு படங்களிலும் செவ்வகத் தொகுதி