பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

webzine

1563

well behaved




கருவிப் பெட்டியின் உதவியுடன், வைய விரிவலையை அணுகி, வலைப்பக்கங்களைத் தொலைக்காட்சித் திரையில் காண்பதற்கான தொழில் நுட்பம்.


webzine : வலைஇதழ்; இணைய இதழ்; மின்னிதழ் : தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ்.


weed : களை : ஒரு கோப்பிலிருந்து விரும்பத்தகாத அல்லது தேவையற்ற இனங்களை அகற்றுதல்.


weighted code : எடைக்குறியீடு : துண்மியின் இடைநிலை ஒர் எடையிட்ட மதிப்பளவைக் கொண்டிருக்கிற குறியீடு. 8-4-2-1 என்ற எடையிட்ட குறியீட்டுப் பொறியமைவில் 529 என்ற பதின்ம எண், 0101 0010 1001 என்று எழுதப்படும்.


weitek coprocessor : வெய்டெக் கூட்டுச் செயலகம் : வெய்டெக் கார்ப்பரேஷன் உருவாக்கிய நுண் மற்றும் சிறு கணினிகளுக்கான அதிக திறன்மிக்க கணினி கூட்டுச் செயலகம். 1981-முதல் இந்நிறுவனம் கேட் மற்றும் வரைகலை பணி நிலையங்களுக்கான கூட்டுச் செயலகங்களை உருவாக்கி வருகிறது. இதனைப் பயன்படுத்த மென் பொருளும் இதன் மீதே எழுதப் பட்டிருக்க வேண்டும்.


WELL : வெல் : முழுப்புவி மின்னணுத் தொடுப்பு என்று பொருள்படும் Whole Earth Electronic Link என்ற தொடரின், தலைப்பெழுத்துக் குறும்பெயர். கலிஃபோர்னியா மாநிலத்தில் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு கலந்துரையாடல் அமைப்பு. பல்வேறு நகரங்களிலிருந்து இணையம் வழியாக, தொலைபேசி இணைப்பு மூலம் அணுக முடியும். இது ஒரு மெய்நிகர் மனிதச் சமூகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. கணினி வல்லுநர்கள் தவிர சாதாரண மக்களும் இதில் விரும்பிப் பங்கேற்கின்றனர். ஏராளமான பத்திரிகையாளர்களும் பிற செல்வாக்குப் பெற்ற அறிஞர்களும் பங்கு பெறுவதால், இதனுடைய குறைந்த எண்ணிக் கையிலான வாடிக்கையாளர்களையும் தாண்டி பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


well behaved : நன்னடத்தையுள்ள : ஒரு தர அமைப்பில்