பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

welcome page

1564

wheel printer


 இருந்து விலகிச் செல்லாத நிரல் தொடரைக் குறிப்பிடுகிறது.

welcome page : வரவேற்புப் பக்கம்.

welknown port : நன்கறிந்த துறை.

west coast computer fair : மேற்குக்கரைக் கணினிக் காட்சி : அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான நுண் கணினி வணிகக் கண்காட்சி.

wetware : வெட்வேர் : உயிரியல் அமைப்பு அல்லது அதைப் போலச் செய்ய முயலும் ஒன்று.

wetzel : வெட்ஜெல் : ஒரு எதிர் மின் கதிர்க்குழாயிலுள்ள உருக் காட்சியுடன் சேர்க்கப்படும் படக்கூறு. இது காட்சியின் தெளிவினை மேம்படுத்த உதவுகிறது.

what if : விரிதாள் வினவல் ; காரண விளைவு அலசல் : பெரும்பாலான மின்னணு விரிதாள் செயல்முறைகள் செயற்படுகிற வளாகம். மற்ற மதிப்பளவுகளின் கூட்டு விளைவினை தீர்மானிக்க புதிய மதிப்பளவுகளைப் புதிதாக அமைக்கலாம்.

what-if analysis : இது கொடுத்தால் எது கிடைக்கும்; இது தரின் எது வரும் : விரிதாள் பயன்பாட்டில் இருக்கின்ற வசதி. சில உள்ளீடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விடை பெறப்பட்டுள்ளது; உள்ளீட்டு மதிப்புகளில் ஒன்றை மாற்றும் போது, அதற்கேற்ப விடையும் உடனடியாக மாற்றம் பெறும். எடுத்துக்காட்டாக, வங்கியில் கடன் பெறும் ஒருவர், வெவ்வேறு வட்டி வீதங்களில் மாதத்தவணையாக எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும் என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். what will be the result, if the input is this? என்பதன் சுருக்கமே what if analysis எனப்படுகிறது.

whatis : வாட்இஸ்; என்ன இது : 1. யூனிக்ஸ் கட்டளை. யூனிக்ஸ் கட்டளைகளில் பயன்படுத்தப்படும் சிறப்புச் சொற்கள் பற்றிய விளக்கங்களைத் தரும். 2. இணையத்திலுள்ள ஒரு மென்பொருளைத் தேடிக் கண்டறிய, அதைப்பற்றிய விவரிப்பில் குறிப்பிட்ட சொற்கள் உள்ளனவா எனத் தேடுவதற்குப் பயன்படும் ஓர் ஆர்க்கி (Archie) கட்டளை.

wheel printer : சக்கர அச்சுப்பொறி, உருளை அச்சு : அச்சடிக்கும் எழுத்துகளை உலோகச் சக்கரங்களில் கொண்டிருக்கும்