பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Wilkes Maurice Vincent

1568

winchester disks


 பெரும்பாலும் நட்சத்திர அடையாளம் (*) ஓரெழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலாக இடம் பெறும். கேள்விக்குறி (?) ஓரெழுத்துக்குப் பதிலாக இடம் பெறும். இயக்க முறைமைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை, அதாவது குறிப்பிட்ட கோப்புகளின் தொகுதியைக் கையாள இக்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. (எ-டு) : SALES.* என்பது SALES என்னும் முதன்மைப் பெயருள்ள, வகைப்பெயர் (extension) எதுவாக இருப்பினும் அத்தனை கோப்புகளையும் குறிக்கும். *. DOC என்பது DOC என்னும் வகைப்பெயர் கொண்ட அனைத்து கோப்புகளையும் குறிக்கும். SALES1. XLS, SALES2. XLS, SALES3. XLS ஆகிய கோப்புகளை SALE?. XLS என்று குறிப்பிடலாம்.

Wilkes Maurice Vincent : வில்கஸ், மாரிஸ் வின்சென்ட் : கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மின்னணு சேமிப்புத் தானியங்கிக் கணிப்பியை 1949இல் உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்தவர்.

WIN32 : வின்32 : விண்டோஸ் 95/98 என்டி இயக்க முறைமைகளுக்கான பயன்பாடுகள், இன்டெல் செயலி 80386 மற்றும் அதனிலும் மேம்பட்ட செயலிகளிலுள்ள 32-பிட் நிரல்களைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும், பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தைக் (Application Programm Interface - API) குறிக்கிறது. விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி ஆகியவை 16-பிட் உள்ள 80x86 நிரல்களையும் ஏற்கும் என்றபோதிலும், வின்32 செயல்திறன் மிக்கதாகும்.

WIN32S : வின்32எஸ் : வின்32 பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தின் ஓர் உட்பிரிவு. விண்டோஸ் 3. எக்ஸில் செயல்படக் கூடியது. இலவசமாக வழங்கப்படும் வின்32எஸ் மென்பொருளைச் சேர்த்துக் கொண்டால், ஒரு பயன்பாடு இன்டெல் 80386 மற்றும் மேம்பட்ட செயலிகளில், விண்டோஸ் 3. எக்ஸ் சூழலில் செயல்படும் போது, 32-பிட் நிரல்களைப் பயன்படுத்திக் கொள்வதால் செயல்திறன் அதிகரிக்கும்.

winchester disk drive : வின்செஸ்டர் வட்டு இயக்கி : அதி வேகத்துணை நிலைச் சேமிப்புச் சாதனம். இது ஒரு வகை நிலை வட்டு. இது காற்றுப் புகாத கொள்கலத்தில் வைத்து முத்திரையிடப்பட்டிருக்கும்.

winchester disks : வின்செஸ்டர் வட்டுகள்.