பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bit bucket

156

bit density


யாய் அமைந்த படப்புள்ளிகளின் பண்பியல்புகளை மாற்றவும், கையாளவும் பயன்படும் ஒரு நிரலாக்கத் தொழில்நுட்பம். பட உருவம் ஒரு சிறிய சுட்டுக்குறி (cursor) யாகவோ, ஒரு கார்ட்டூன் படமாகவோ இருக்கலாம். இத்தகைய துண்மித் தொகுதியை ஒற்றை அலகாக ஒளிக்காட்சி நினைவகத்தில் நகர்த்துவதன் மூலம் கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிவேகமாய் திரையிட முடியும். துண்மிகளின் மதிப்புகளை மாற்றுவதன் மூலம் உருவப்படங்களில் ஒளிப் பகுதியை மாற்றமுடியும். தொடர்ச்சியாக அடுத்தடுத்துத் திரையிடுவதன் மூலம் பட உருவங்களின் தோற்றத்தை மாற்ற முடியும். நடமாடுவது போலச் செய்யவும் முடியும்.

bit bucket : துண்மிக் கூடை : துண்மிக் குப்பைத் தொட்டி : தரவுவை கழித்துக்கட்டப் பயன் படுத்தப்படும் ஒரு கற்பனை இடப்பகுதி. வெற்று (null) உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம் எனலாம். இதில் போடப்படும் விவரங்களைப் படித்தறிய முடியாது. டாஸ் இயக்க முறைமையில் இந்தத் துண்மிக் குப்பைத் தொட்டி நல் (null என்று அறியப்படுகிறது. யூனிக்ஸ் இயக்க முறைமையில், /dev என்னும் கோப்பகத்தில் இத்தகைய வெற்றுச் சாதனக் கருத்துரு உண்டு. ஒரு கோப்பகத்திலுள்ள கோப்புகளின் பட்டியலை வெற்றுச் சாதனத்துக்கு அனுப்பும்போது, பட்டியல் திரையில் தெரியாமல் மறைந்து விடுகிறது. இயக்க முறைமை தருகின்ற பிழை சுட்டும் அல்லது பிற வகைச் செய்திகளை திரையில் காட்டப்படாமலிருக்கும் பொருட்டு அச்செய்திகளை வெற்றுச்சாதனம் என்னும் குப்பைத் தொட்டிக்கு அனுப்பி வைப்பதுண்டு. C. \>Copy File1 File2 >NUL என்ற டாஸ் கட்டளை கோப்பை நகலெடுத்த பிறகு 1 File (s) copied எனும் செய்தியைத் திரையில் காட்டாது.

bit check : துண்மிச் சரி பார்ப்பு.

bit controi : துண்மி கட்டுப்பாடு : வரிசையான தரவுவை அனுப்பும் முறை. இதில் ஒவ்வொரு துண்மியும் ஒரு தனிப் பொருள் கொண்டது. ஒவ்வொரு எழுத்துக்கு முன்னும் பின்னும் தொடங்கவும், நிறுத்தவுமான துண்மிகள் இருக்கும்.

bit density : துண்மி அடர்த்தி : ஒரு குறிப்பிட்ட நீள அலகிலோ அல்லது காந்த நாடாவின் பரப்பளவிலோ அல்லது வட்டிலோ பதிவு செய்யப்பட்டுள்ள துண்மிகளை அளப்பது.