பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

winchester technology

1569

Windows 95



winchester technology : வின்செஸ்டர் தொழில் நுட்பம் : கடின காந்த வட்டு சேமிப்பகங்களில் நிரந்தரமாக (அணுகு கரங்கள் மற்றும் படி/எழுது முனைகளுடன்) மூடப்பட்ட பாதுகாப்பான பெட்டிகளில் வைக்கப்படுபவைகளுக்குத் தரப்படும் பெயர். பல அளவுகளிலும், சேமிப்புத் திறன்களிலும் வின்செஸ்டர் வட்டு அமைப்புகள் வருகின்றன.

window : பலகணி; சாளரம் : ஒளிப்பேழைக் காட்சிப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறித்தமைக்கப்பட்டுள்ள ஒரு பகுதி. திரையை பன்முகப் பலகணிகளாகப் பகுப்பதற்கு ஒரு தனிவகை மென்பொருள் அனுமதிக்கிறது. இந்தப் பலகளிைகளை நகர்த்தலாம். பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்கலாம். இது பெரிய சொல் செய்முறைப்படுத்தும் ஆவணங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது.

window definition function : சாளர வரையறுப்புச் செயல்கூறு : ஒரு மெக்கின்டோஷ் பயன்பாட்டில் ஒரு சாளரத்தோடு தொடர்புடைய வளத்தைக் குறிக்கும். ஒரு சாளரத்தை திரையில் காட்டும்போதும், சாளர அளவுகளை மாற்றியமைக்கும்போதும் மெக்கின்டோஷ் "விண்டோ மேனேஜர் நிரல் இந்த செயல் கூறை நிறைவேற்றும்.

windowing : பலகணியாக்கம்; சாளரமாக்கல் : திரையில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளை அல்லது ஒரு கோப்பின் பகுதிகளைக் காட்டுதல்.

window menu : சாளரப் பட்டி.

windows : சாளரம்; பலகணி.

Windows 95 : விண்டோஸ் 95 : இன்டெல் 80386, அதற்கும் மேம்பட்ட செயலிகளில் செயல்படக்கூடிய ஓர் இயக்க முறைமை. வரைகலைப் பயனாளர் இடைமுகம் கொண்டது. மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் ஆகஸ்ட் 1995இல் வெளியிட்டது. விண்டோஸ் 3. 11, பணிக்குழுவுக்கான விண்டோஸ் 3. 11, எம்எஸ் டாஸ் ஆகிய அனைத்திற்கும் மாற்றாக வெளியிடப்பட்ட ஒரு முழுமையான இயக்கமுறைமை. விண்டோஸ் 3. x டாஸ்மீது செயல்படும் ஒரு பணிச்சூழல் (Operating Environment). ஆனால் விண்டோஸ் 95, டாஸின் உதவியின்றிச் செயல்படும் ஒரு தனித்த இயக்க முறைமை. என்றாலும் எம்எஸ்டாஸ் மென்பொருள்களை விண்டோஸ் 95இல்