பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

windows application

1570

Windows Driver Library


 இயக்கமுடியும். 255 எழுத்துகள் வரை நீண்ட கோப்புப் பெயர்களை வைத்துக் கொள்ளலாம். எந்தப் பிணையத்தின் கிளையனாகவும் செயல்படவல்லது. தம்மளவில் விண்டோஸ் 95 கணினிகளை ஒன்றாகப் பிணைத்து, சமனி-சமனி (peer to peer) பிணையம் அமைத்துக் கொள்ளமுடியும். இணைத்து இயக்கு (plug and play) முறையில் எந்தவொரு வன்பொருளையும் அதுவாகவே அடையாளம் காணும். பல்லூடகம், இணைய இணைப்புக்கான வசதிகள் அனைத்தும் கொண்டது. 80386 செயலி, 4 எம்பி ரேம் உள்ள கணினிகளில் செயல்படும். என்றாலும் 80486 செயலி 8 எம்பி ரேம் இருப்பது நல்லது.

windows application : விண்டோஸ் பயன்பாடு : மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் சூழலில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள் பயன்பாடு.

windows-based accelerator : விண்டோஸ் அடிப்படையிலான வேக முடுக்கி : விண்டோஸ் மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகளை வேகமாக இயக்குவதற்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மீத்திறன் விஜிஏ (Super VGA) ஒளிக்காட்சித் தகவியின் ஒருவகை. தகவியின் படிப்பு நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தனிச்சிறப்பு நிரல் கூறுகளின் உதவியால், சாதாரண எஸ். விஜிஏ ஒளிக் காட்சித் தகவிகளைவிடக் கூடுதல் வேகமும் திறனும் கொண்டது. இந்த நிரல்கள், ஒளிக்காட்சி தொடர்பாக ஆற்ற வேண்டிய சில பொறுப்புகளிலிருந்து விண்டோஸ் இயக்க முறைமையை விடுவிக்கின்றன. இதனால் செயல்பாட்டு வேகம் கூடுகிறது.

Windows CE : விண்டோஸ் சிஇ : மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் குறுகிய வடிவம். கையகக் கணினிகளுக்கென வடிவமைக்கப்பட்டது. எக்செல், வேர்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஷெட்யூல்+, மின்னஞ்சல் கிளையன் போன்ற விண்டோஸ் பயன்பாடுகள் பலவற்றின் குறுகிய வடிவங்களையும் விண்டோஸ் சிஇ-யில் இயக்க முடியும்.

Windows Driver Library : விண்டோஸ் இயக்கி நூலகம் : மூல விண்டோஸ் தொகுப்பில் சேர்க்கப்படாத, மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமைக்கான வன்பொருள் சாதன இயக்கிகளின் தொகுதி.