பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

windows environment

1571

Windows Metafile Format




windows environment : சாளரச் சூழ்நிலை : திரையில் பல் சாளரங்களை அளிக்கின்ற பயன்பாட்டு நிரல் தொடர் அல்லது விரிவாக்கம். டெஸ்க்வியூ, விண்டோஸ், பிஎம், மல்டி ஃபைன்டர், மற்றும் எக்ஸ் விண்டோ ஆகியவை இதற்குச் சான்றுகள். இப்போது செயலாக்க அமைப்பையே 'விண்டோஸ் என்ற சொல் குறிப்பிடுகிறது.

Windows Explorer : விண்டோஸ் எக்ஸ்புளோரர் : விண்டோஸ் 95/98இல், கோப்பு மற்றும் கோப்புறைகளை மேலாண்மை செய்வதற்கு அமைந்துள்ள ஒரு பயன்கூறு. விண்டோஸ் 3. 1-ன் கோப்பு மேலாளர் (File Manager) நிரலை ஒத்தது. ஒரு விண்டோவில் இரண்டு பாளங்கள் (Panels) இருக்கும். இடப்புறப் பாளத்தில் கோப்புறைகளின் பட்டியலைப் பார்வையிடலாம். ஒரு கோப்புறையைத் தேர்வு செய்து அதன் உள்ளடக்கத்தை வலப்புறப் பாளத்தில் பார்வையிடலாம்.

Windows For Workgroups : பணிக் குழுவுக்கான விண்டோஸ் : 1992ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விண்டோஸின் ஒரு பதிப்பு. ஈதர்நெட் லேனில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. இதற்கென தனியான பிணைய மென்பொருள் தேவையில்லை.

Windows keyboard : விண்டோஸ் விசைப்பலகை.

Windows Media Player : விண்டோஸ் மீடியா பிளேயர் : ஒரு மென்பொருள்.

windows metafile : விண்டோஸ் மெட்டாஃபைல் : 'மைக்ரோசாஃப்ட்' விண்டோஸ் நிறுவனம் பயன்படுத்தும் வரைகலைக் கோப்புப் படிவம். இதில் நெறிய (வெக்டார்) வரைகலை, பிட்மேப், சொற்பகுதி ஆகியவை இடம்பெறும். சில சமயங்களில் மெட்டா ஃபைல்களை தற்காலிக சேமிப்பகத்துக்கு பயன்படுத்துவார்கள். ஆனால், அதன் பயன்பாடுகள் பெரும்பாலும் மறுமுறை பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்கப்படுகின்றன.

Windows Metafile Format : விண்டோஸ் மீகோப்பு வடிவாக்கம் : நெறிய வரைகலைக் (vector graphics) கோப்புகளுக்கான விண்டோஸ் கோப்பு வடிவாக்கம். இரண்டு பயன்பாடுகளுக்கிடையே வரைகலைத் தரவுகளை பரிமாறிக் கொள்ளவும், இருவேறு பணி அமர்வு