பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

WΙΝS

1573

wired programme



வின்ஜி-யின் கீழ், விளையாட்டு நிரல்கள் ஒளிக்காட்சிச் சட்ட இடையகத்தை (Video Frame Buffer) நேரடியாக அணுக முடியும். இதனால் வேகம் கூடும்.

WINS : வின்ஸ் : விண்டோஸ் இணையப் பெயரிடு சேவை எனப் பொருள்படும் Windows internet Naming Service என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் புரவன் பெயரை (Host Name) அதன் ஐ. பீ முகவரியோடு பொருத்தும் விண்டோஸ் என்டீ செர்வர் வழிமுறை.

WINS - Configuration : வின்ஸ் உள்ளமைவு.

Winsock : வின்சாக் : விண்டோஸ் செருகுவாய் என்று பொருள்படும் Windows Socket என்பதன் சுருக்கம். விண்டோஸில் டீசிபி/ஐபி இடைமுகத்தை வழங்குகின்ற ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API). 1991இல் நடைபெற்ற யூனிக்ஸ் மாநாட்டில் மென்பொருள் விற்பனையாளர்களிடையே நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தர வரையறை. மைக்ரோசாஃப்ட் உட்பட பல மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆதரவினை இது பெற்றது.

Wintel : வின்டெல் : மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமையையும், இன்டெல் மையச் செயலகத்தையும் கொண்ட கணினிகளைக் குறிக்கும் சொல்.

wire board : கம்பிப் பலகை.

wired , பிணைப்புறு; இணைப்புறு : 1. ஒரு மின்னணுச் சுற்று அல்லது வன்பொருள் தொகுதியின் பண்புக் கூறு. அவை எந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளதோ அதன்படியேதான் அதன் தகவமைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு மென்பொருள் மூலமாக விரும்பியவாறு நிரல்படுத்தவோ, ஒரு நிலைமாற்றியின் மூலம் மாற்றியமைக்கவோ முடியாது. 2. இணைய வளங்கள், அமைப்புகள், பண்பாடு பற்றி அறிந்திருத்தல். 3. இணையத்தோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்.

wired programme computer : கம்பிச் செயல்முறைக் கணினி : நிறைவேற்ற செயற்பாடுகள், கம்பி அமைப்பு மற்றும் கம்பி இணைப்புகள் மூலம் குறிப்பிடப்படுகிற நிரல்களைக் கொண்டுள்ள கணினி. இந்தக் கம்பிகள், அகற்றக்கூடிய கட்டுப்பாட்டு தொடர்மூலம் பிணைக்கப் பட்டுள்ளன. இது