பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wireframe

1574

wire-wrapper circuits


 செயற்பாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நெகிழ்திறனை அளிக்கிறது.

wireframe : வலைப்புள்ளிச் சித்திரம்; கம்பிச் சட்டம்.

wireframe modeling : கம்பிச் சட்ட மாதிரியமைப்பு : கேட் பயன்பாட்டில் முப்பரிமாணத்தைக் குறிப்பிடும் ஒரு நுட்பம். இதில் எல்லா கோடுகளும், எதிர்க்கோடுகளும் தெளிவாகக் காட்டப்படும். ஆனால், உட்புற உறுப்புகள் பார்வையிலிருந்து மறைக்கப்படும். மேற்பரப்பு மற்றும் திட மாதிரியமைப்பை விட, கம்பிச் சட்ட மாதிரியமைப்பு முப்பரிமாண உருவங்களுக்கு எளிதானது.

wireless : கம்பியிலா.

Wireless LAN : கம்பியில்லா லேன் : தனித்த கணுக் கணினிகளுக்கும் குவியத்துக்கும் (Nodes and Hub) இடையே பருநிலை இணைப்பு எதுவும் இல்லாமல், வானலை, அகச்சிவப்பு ஒளிச்சமிக்கை அல்லது பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவலை அனுப்பவும். பெறவும் முடிகிற குறும்பரப்புப் பிணையம். பயனர் ஒரு கையகக் கணினியை இங்கும் அங்கும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கின்ற அலுவலக அல்லது தொழில்கூடச் சூழல்களில் கம்பியில்லா லேன் தொழில்நுட்பம் மிகவும் பயன்படக்கூடியது.

wireless telephone : கம்பியிலா தொலைபேசி.

wire printer : கம்பி அச்சுப் பொறி.

wire wrap : கம்பிப் பொதிவு ; கம்பிச் சுற்றமைவு : மின்சுற்றுவழிப் பலகை உருவாக்குவதில் ஒருவகை. இதில் மின் இணைப்புகள், உரிய உறுப்புகளின் இணைப்பு முனைகளுக்கு இணையான கம்பங்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள் வழியாக ஏற்படுத்தப்படுகின்றன.

wire-wrapper circuits : கம்பி சுற்றிய மின்சுற்றுகள் : அச்சிட்ட மின்சுற்றுப் பலகைகளில், உலோக இணைப்புத் தடங்களுக்குப் பதிலாக, துளையிடப்பட்ட பலகைகளில் கம்பிகளால் இணைக்கப்படும் மின்சுற்று. இணைப்புக் கம்பிகளின் முனைகள் நீண்ட பின்களின் மீது சுற்றி வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இத்தகைய மின்சுற்றுகள் கையால் செய்யப்பட்டவை. மாதிரியங்களை உருவாக்கவும், மின்சாரப் பொறியியலில் ஆய்வுகளை மேற்