பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

word length

1576

word processing


 word length : சொல்நீட்சி ; சொல் நீளம் : ஒரு சொல்லிலுள்ள துண்மிகளின் எண்ணிக்கை. பொதுவாக, இது 4, 8, 16 அல்லது 32 என்ற எண்ணிக்கைகளில் இருக்கும்.

Word Pad : வேர்டுபேட் : ஒரு சொல்செயலி மென்பொருள்.

word parser : சொல் பகுப்பான்.

word passing : சொல் பரப்பி.

Wordperfect : வேர்டுபர்ஃபெக்ட் : கோரல் நிறுவனம் வழங்குகின்ற முழுநீள சொல் செயலாக்கத்தில் அனைத்துத் தன்மைகளும் கொண்ட நிரல் தொடர். 1980இல் அறிமுகப்படுத்தப்பட்ட இது ஐ. பி. எம் ஆப்பிள் II, மெக்கின்டோஷ், அமீகா, அட்டாசி போன்ற தனிநபர் கணினிகளில் பயன்படுகிறது. பதிப்பு 5. 0 இல்... முன்பார்வை முறையும், பதிப்பு 6. 0இல் வரைகலை முறையும் ஹையேர் டெக்ஸ்ட் ஆவணங்களை உருவாக்கும் திறனும் பெற்றுள்ளது.

word processing : WP : சொல் செய்முறைப்படுத்துதல் ; சொல் தொகுப்பு நிரல் தொடர் : ஒரு மின்னணு விசைப்பலகை, கணினி, அச்சுப்பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணுமுறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்குமான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற ஒரு காந்தச் சாதனத்தில் பதிவு செய்யப்படுகிறது. இறுதி வெளிப்பாடு காகிதத்தில் பதிவாகிறது.

word processing centre : சொல் தொகுப்பி செய்முறைப்படுத்தும் மையம் : சொல் செய்முறைப்படுத்தும் சாதனங்களையும், ஓர் அமைவனத்திற்கு எழுதிய செய்திகளைத் தயாரிப்பதற்குரிய வசதிகளையும் உடைய ஒரு மையம்.

word processing machine : சொல் செயலாக்க எந்திரம் : சொல் செயலாக்கப் பணிகளுக்கு மட்டுமே சிறப்பாகப் பயன்படுத்தப்படும் கணினி.

word processing operator : சொல் செய்முறைப்படுத்தும் இயக்குநர் : சொல் செய்முறைப்படுத்தும் சாதனத்தை இயக்குகிற ஆள்.

word processing package : சொல் செயலாக்கத் தொகுப்பு : சொல் செயலாக்கப்பணிகளைச் செய்யும் மென்பொருள்.

word processing programme : சொல் செய்முறைப்படுத்தும் நிரல் : வாசகத்தை எழுதுவதிலும், பதிப்பிப்பதிலும் உருவமைப்பிலும் கணினி பொறி