பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

word processing society

1577

work area


 யமைவுக்கு வழிகாட்டுகிற மென் பொருள். இதுவும் சொல் செய்முறைப்படுத்தி என்பதும் ஒன்றே.

word processing society (WPS) : சொல் செய்முறைப்படுத்தும் கழகம் : சொல் செய்முறைப்படுத்துவதை ஒரு தொழிலாக வளர்ப்பதற்காகப் பள்ளிகளில் சொல் செய்முறைப்படுத்தும் கல்விச் செயல்முறைகளை ஊக்குவிக்கிற அமைவனம்.

word processing system : சொல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு : தானியங்கும் கணினிமயமாக்கிய தட்டச்சு, படியெடுப்பு, கோப்பிடுதல், எழுதக்கூறுதல், ஆவணமீட்பு ஆகியவற்றை தொடர்புபடுத்துகிற தகவல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு. இக்கால அலுவலகங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

word processor : சொல் செய்முறைப்படுத்தி; சொல் செயலி; சொல் தொகுப்பி : வாசகங்களைக் கையாள்வதற்கு வசதி செய்துகொடுக்கும் கணினிச் செயல்முறை. இதனை, ஆவணங்களை எழுதுதல், சொற்கள், பத்திகள் அல்லது பக்கங்களைப் புகுத்துவதற்கு அல்லது மாற்றுவதற்கு பயன்படுத்தலாம். ஆவணங்கள் அச்சடிக்கவும் பயன்படுகிறது.

word publishing : சொல் பதிப்பித்தல் : கலத்தல், காட்டுதல் மற்றும் சொல்-வரைகலை அச்சிடல் போன்ற டி. டீ. பீ தன்மைகளை வழங்கும் சொல் செயலாக்கம்.

word search : சொல் தேடல்.

word separator : சொல் பிரிப்பி : ஒரு சொல்லைப் பிரிக்கின்ற ஒரு அமைப்பு-வெற்றிடம், காற்புள்ளி, புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி போன்றன.

words, reserved : ஒதுக்கீட்டு சொற்கள்.

Wordstar : வேர்டுஸ்டார் : பெரும்பாலான நுண்கணினிப் பொறியமைவுகளில் உள்ள புகழ்பெற்ற சொல் செய்முறைப்படுத்தி. மைக்ரோ புரோ நிறுவனத்தின் தயாரிப்பு.

word wrap : சொற் பொதிவு : சொல் மடிப்பு : ஒரு சொல், மூல வரிகளின் இறுதியில் பொருந்தவில்லையென்றால் அதனை தானாகவே அடுத்த வரியின் தொடக்கத்திற்கு நகர்த்திவிடுகிற சாதனம். இது சொல் செய்முறைப்படுத்தும், பொறியமைவுகளில் காணப்படும்.

work area : பணி இடப் பரப்பு.