பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

work around

1578

work offline


 work around : ஒப்பேற்றுதல்; சமாளித்தல் : ஒரு மென்பொருளில் அல்லது வன்பொருளில் பிழை அல்லது பிற குறைபாடுகள் இருப்பினும் அக்குறைபாட்டினை நீக்காமலே குறிப்பிட்ட பணியை ஒருவாறாகச் செய்துமுடிக்கும் தந்திரம்.

Workbook : பணிப்புத்தகம் : எக்செல் போன்ற விரிதாள் பயன்பாடுகளில், பல தொடர்புடைய பணித்தாள்களைக் கொண்ட ஒரு கோப்பு.

workbench : பணிமேசை; பணி மேடை : வன்பொருள் மற்றும் மென்பொருள் இனங்களைப் பல பயன்பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் செயல்முறைப்படுத்தும் சூழல்.

work breakdown structure : பணி முறிவுக் கட்டமைவு ; பணிப் பகுப்புக் கட்டமைவு : ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முடிப்பதற்குத் தேவைப்படும் பணிக்கூறுகளையும் சாதனங்களையும் விரிவான பட்டியலாகத் தயாரித்தல். திட்டமிடும் செய்முறையை விரைவுபடுத்தத் திட்ட வரைவாளருக்குப் பயன்படும் சாதனம்.

workflow application : பணிப்பாய்வுப் பயன்பாடு : ஒரு திட்டப்பணியின் தொடக்கம் முதல் இறுதிவரை அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து மேலாண்மை செய்வதற்கு உதவும் நிரல்களின் தொகுப்பு.

work group : பணிக்குழு : கோப்புகளையும் தரவுத் தளங்களையும் பங்கிட்டுக் கொள்ளும் இரண்டு அல்லது மேற்பட்ட தனி நபர்கள். பணிக் குழுவை ஒட்டி அமைக்கப்படும் 'லேனில்' மின்னணு தரவுகளைப் பங்கிட்டுக் கொள்ள முடியும்.

work group computing : பணிக் குழு கணிப்பு : பணிக்குழு சூழ்நிலையில் இறுதிப் பயனாளர் கணிப்பிடல். இதில் தங்களது வன்பொருள் மென்பொருள் மற்றும் தரவுத் தளங்களை குழுவின் வேலைகளுக்காக லேன் முறையில் பணிக்குழுவின் உறுப்பினர் எவரும் பயன்படுத்தமுடியும்.

working directory : பணியாற்றும் கோப்பகம் : தரவு மாற்றல்களுக்காக நடப்பில் பயன்பட்டுவரும் விவரத் தொகுப்பு.

working storage : செயற்படு சேமிப்பகம் : தற்காலிகச் சேமிப்பகம் என்பதும் இதுவும் ஒன்றே.

work offline : அகல்நிலை பணி செய்.