பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

workplace shell

1579

World Conference on


 workplace shell : ஒர்க்பிளேஸ் ஷெல் ; பணியிட செயல்தளம் : ஒஎஸ்/2 இயக்க முறைமையின் வரைகலைப் பயனாளர் இடைமுகம். மேக்ஓஎஸ், விண்டோஸ் 95 போலவே ஒர்க்பிளேஸ் ஷெல்லும் ஆவணங்களை மையமாகக் கொண்டது. ஆவணக் கோப்புகள் சின்னங்களாகக் காட்டப்படும். ஒரு ஆவணச் சின்னத்தின்மீது சொடுக்கியதும் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாடு முதலில் திறந்து பின் அதில் ஆவணம் திறக்கப்படும். ஓர் ஆவணத்தை அச்சிட அந்த ஆவணத்துக்குரிய சின்னத்தை அச்சுப்பொறி சின்னத்தின்மீது இழுத்து விட்டால்போதும். ஒர்க்பிளேஸ் ஷெல், பிரசென்டேஷன் மேனேஜர் மென்பொருளின் வரைகலைச் செயல் கூறுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

worksheet : பணித்தாள் : விரி தாள், திட்டத்தாள் என்பனவும் இதுவும் ஒன்றே.

worksheet compiler : பணித்தாள் தொகுப்பு : spread sheet போன்றதே.

workspace : பணியிடம் : செயற்பாட்டுச் சேமிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள செயல் முறைகளுக்கும் தரவுகளுக்குமான உள்முக சேமிப்பு அளவினைக் குறிக் கும் சொல்

workstation : பணி நிலையம் : ஒரே சமயத்தில் ஒருவரே பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கணினிச் சாதனங்களின் தொகுதி. இது, ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு முனையமாகவோ, உள்முகச் செய்முறைப்படுத்தும் திறனுள்ள தனித்தியங்கும் பொறியமைவாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டு : தனித்தியங்கும் வரைகலைப் பொறியமைவு, சொல் செய்முறைப்படுத்தி; நேரப்பகிர்வு முனையம்.

work year : பணியாண்டு : ஓர் ஆள் ஒராண்டு செய்துள்ள முயற்சிகள். ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்க எத்தனை ஆட்கள் தேவைப்படும் என மதிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்.

World Conference on Computer in Education (WCCE) : கல்வியியல் கணிப்பொறி பற்றிய உலக மாநாடு (டபிள்யூசிசிஇ)  : பன்னாட்டுத் தரவு செய்முறைப்படுத்தும் இணையமும், அமெரிக்கத் தகவல் செய்முறைப் படுத்தும் கழகங்களும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கணினிக் கல்வி மாநாடு. இது வெவ்வேறு நாடு