பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Wozniak, Stephen

1581

wraparound




என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வெவ்வேறு விற்பனையாளர்கள் உருவாக்கும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளச் செய்ய, மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களின் (APls) தொகுப்பு. திறந்தநிலை தரவுத் தள இணைப்புறுத்தம் (Open Data Base Connectivity-ODBC). செய்தியனுப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Messaging Application Programming Interface-MAPI) தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Telephone Application Programming Interface-TAPI) விண்டோஸ் பொருத்துவாய்கள் {Windows Sockets - Winsock) மைக்ரோ சாஃப்ட் தொலைநிலை செயல்முறை அழைப்புகள் (Remote Procedure Calls - RPC) ஆகியவை, வோசாவில் அடக்கம்.

Wozniak, Stephen : ஓஸ்னியாக், ஸ்டீபன் : ஆப்பிள் கணினிக் கழகம் என்ற அமைவனத்தின் கூட்டு நிறுவனர். Apple lLa, மெக்கின்டோஷ் போன்ற பல நுண்கணினிப் பொறியமைவுகளை உருவாக்கியவர்.

. wp : . டபிள்யூபீ : வேர்டு பெர்ஃபெக்ட் எனப்படும் (கோரல் நிறுவன வெளியீடு) சொல் செயலி மென்பொருளில் உருவாக்கப்படும் ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர் (extension).

WPM : டபிள்யூபீஎம் : வினாடிக்கு எத்தனை சொற்கள் என்று பொருள்படும் Word Per Minute என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். தரவு அனுப்பீட்டு வேகத்தின் அளவு.

WRAM : டபிள்யூரேம் : சாளர குறிப்பிலா அணுகு நினைவகம் என்று பொருள்படும் Window Random Access Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிக்காட்சித் தகவிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை ரேம். ஒளிக்காட்சி ரேம் (VRAM) போலவே, ஒரு வரைகலைப் படிமம் எழுதப்படும்போதே திரையை மறு வண்ணமிட (Repaint) டபிள்யூ ரேம் அனுமதிக்கிறது. ஆனால், விரேமைவிட டபிள்யூ ரேம் வேகம் அதிகம் கொண்டது.

wraparound : சுற்றுப்பபொதிவு : மிகப் பெரிய முகவரியிடத்தக்க அமைவிடத்திலிருந்து முதல் முகவரியிடத்தக்க அமைவிடத்துக்கு மாற்றுதல், காட்சிச் சறுக்கு நகர்வினை கடைசி