பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X-height

1587

Xon/Xoff


கின்ற ஒரு கட்டளைத் தொகுதி. முதன்மையான நிரலிலிருந்து அழைப்பு வரும்போது இது செயல்படத் தொடங்கும். இது செயல்பட்டு முடிந்தவுடன் ஒரு மதிப்பினை முதன்மையான நிரலுக்குத் திருப்பி அனுப்பும். மெக்கின்டோஷ் கணினிகளுக்கான ஒரு மீஊடக (Hypermedia) நிரலான ஹைப்பர் கார்டு என்னும் நிரலில் எக்ஸ்எஃப்சிஎன்-கள் பயன்படுத்தப்படுகின்றன.

 : x-height : எக்ஸ்-உயரம்' : ஏற்றம் அல்லது இறக்கம் இல்லாத சிறிய எழுத்தின் உயரம். தேர்ந்தெடுக்கப்பட்ட அச்செழுத்தில் எக்ஸ் எழுத்தின் உயரத்திற்குச் சமமானது.

x link : எக்ஸ்-தொடுப்பு.

xmodem : எக்ஸ்மோடம் : ஒத்திசையாத் தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. இது தரவுவை 128பைட்டுகள் கொண்ட தொகுதிகளாக அனுப்பிவைக்கும்.

xmodern-CRC : எக்ஸ்மோடம்-சிஆர்சி : எக்ஸ்மோடம் கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மேம்பட்ட பதிப்பு. தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிய, 2 பைட்டுகள் கொண்ட, சுழற்சிமிகைச் சரிபார்ப்பு (Cyclical Redundancy Check-CRC) முறையைக் கொண்டுள்ளது.

xmodem 1k : எக்ஸ்மோடம் 1கே : கோப்புப்பரிமாற்ற நெறிமுறையான எக்ஸ்மோடத்தின் ஓர் உட்பிரிவு. தொலைதூர, மிகஅதிகத் தகவல் பரிமாற்றத்துக்காக வடிவமைக்கப்பட்டது. இதில், தகவல், 1 கிலோ பைட் (1024 பைட்) கொண்ட தகவல் தொகுதிகளாக அனுப்பப்படுகின்றது. மிகவும் நம்பிக்கைக்குரிய பிழைச் சரிபார்ப்பு நுட்பமும் கொண்டது.

xon/xoff : எக்ஸ்ஆன்/எக்ஸ்ஆஃப் : எக்ஸ்நிகழ்/எக்ஸ்அகல் : ஓர் ஒத்திசையாத் தகவல் தொடர்பு நெறிமுறை. இதில், தகவலைப்பெறும் சாதனம்/ கணினி, தகவலை அனுப்பும் சாதனம் கணினியிலிருந்து தரவுப் பாய்வினைக் கட்டுப்படுத்த தனிச்சிறப்பான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தரவுவைப் பெறும் கணினி தொடர்ந்து தரவுவைப் பெற முடியவில்லையெனில் எக்ஸ்அகல் கட்டுப்பாட்டுக்