பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

z-net

1598

zone position


 பட்ட வடிவம். அதிக அளவு தரவு பரிமாற்றத்தைக் குறைந்த பிழையுடன் கையாளும். கோப்பு பரிமாற்றம் எதிர்பாரா இடையூறு காரணமாய் இடையில் நின்றுபோய் மீண்டும் தொடங்கும்போது தொடக்கத்திலிருந்து தொடங்காமல் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் மீள் தொடங்கு குறியிடம் (checkpoint restart) என்னும் வசதியைக் கொண்டுள்ளது.

z-net : இசட்-நெட் : ஈதர்நெட் போன்ற குறும்பரப்புக் கட்டமைப்பு.

zombie process : சோம்பி செயல்முறை : அதன் நுழைவு செயலாக்கப் பகுதிக்கு வந்த போதிலும், பயனாளர் அல்லது கெர்னல் இடம் ஒதுக்கப் படாத, முடிந்த செயல்முறை. AIX இல் பயன்படுவது.

zone : மண்டலம் ; வட்டாரம் : மீண்டும் பயன்படுத்தக்கூடிய வட்டின் பகுதியில் தங்குகின்ற வட்டுப் பதிவேடுகளில் ஒரு பகுதி.

zone - bit recording : மண்டல பிட் பதிவு.

zone bits : மண்டலத் துண்மிகள்; வட்டாரத் துண்மிகள் : ஆல்ஃபா எண்மான எழுத்துகளைக் குறிக்கும் எண்மானத் துண்மிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் தனிவகைத் துண்மிகள்

zoned decimal : பிரிக்கப்பட்ட பதின்மம் : ஈ. பி. சி. டி. ஐ. சி-யில் குறியீடு இடப்பட்ட எண்ணெழுத்து, ஒவ்வொரு பதின்ம இலக்கமும் ஒரு எட்டியல் சேமிப்பக அளவுள்ளது. இலக்கங்கள் 4 முதல் 7 வரையிலான துண்மிகளிலும், குறியீடுகள் 0 முதல் 3 வரையிலும், மற்றவை 1 களிலும் இருக்கும். சான்றாக, பிரிக்கப்பட்ட பதின்ம படிவத்தில் +123-ன் பதின்ம மதிப்பு 111 0001 1111 0010 1100 0011 என்று குறிப்பிடப்படும். கட்டப்படாத பதின்ம படிவம் என்றும் இது அழைக்கப்படும்.

zone header : மண்டலத் தலைப்பு : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில், ஒவ்வொரு நினைவகத் தொகுதியும் தொடக்கத்தில் ஒரு தலைப்பினைக் கொண்டிருக்கும். நினைவக மேலாண்மை அமைப்புக்குத் தேவைப்படும் தகவல் இத்தலைப்பில் அடங்கியிருக்கும். நினைவகத் தொகுதிகளை சிறப்பாகக் கையாள்வதற்கு இத்தகவல் உதவும்.

zone portion : மண்டலப் பகுதி

zone position : மண்டல நிலை.