பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zone punch

1599

Zooming


 zone punch : மண்டலத் துளை; வட்டாரத் துளை : ஹொலரித் அட்டையில் ஒ, எக்ஸ் அல்லது ஒய் வரிசையிலுள்ள துளை.

zoo210 : ஸூ210 : கோப்புகளை இறுக்கிச் சுருக்கும் நிரலான ஸூ-வின் பதிப்பு 2. 1 இவ்வாறு அழைக்கப்படுகிறது. இறுகிய கோப்புகளின் வகைப் பெயர் (extension). zoo என இருக்கும். எல்ஹெச் ஆர்க் (LHARC) என்னும் நுட்பத்தின் அடிப்படையிலேயே ஸூ210-ன் படிமுறைத் தருக்கம் அமைந்துள்ளது. யூனிக்ஸ் மற்றும் இன்டெல் கணினிகளுக்கான ஸூ210 கிடைக்கிறது.

zoom : பெரிதாக்கு : பல வரைகலை மற்றும் சில விரிதாள் தொகுதிகளில் காணப்படும் தன்மை. வரைகலைப் பொருளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பெரிதுபடுத்திப் பார்க்க இது பயனாளரை அனுமதிக்கிறது. ஒளிப்படக் கலையில் இருந்து இச்சொல் பெறப்பட்டது (ஜூம் லென்ஸ்).

zoom box : ஸூம்பெட்டி ; பெரிதாக்கும் பெட்டி : மெக்கின்டோஷ் கணினிகளில் திரையில் தோன்றும் ஒரு சாளரத்தின் சட்டத்தில் மேல் வலது மூலையில் காணப்படும் ஒர் இயக்கு விசை (control). பயனாளர் இப்பெட்டிமீது மாறிமாறிச் சொடுக்கும்போது, சாளரம் மீப்பெரும் அளவுக்கும், பயனர் முன்பு சரி செய்து வைத்திருந்த தொடக்க அளவுக்கும் இடையே மாறிக் கொண்டிருக்கும்.

zoomed video port : பெரிதாக்கப்பட்ட ஒளிக்காட்சித்துறை.

zoom factor : பெரிதாக்குக் காரணி.

zoom in : அண்மையாக்கு : உள்ளிருப்பதைப் பெரிதாக்கு : பல் ஊடகப் பயன்பாடு அல்லது கணினி வரை கலையில் ஏற்படும் ஒளிப்பட மாற்றம், அது படமெடுக்கும் பொருளை நோக்கி ஒளிப்படக்கருவி நெருங்கி வருவதுபோல் தோன்றுவது. செயலாற்றும் பொருளின் நெருங்கிய பார்வை இதில் கிட்டுகிறது. விரிவாக செயலாற்ற இது மிகவும் உதவிகரமானது. 'இன்ஜூம்' முறையில் அளவு பெரிதாகும்.

zooming : மேற்செலுத்தம் ; பெரிதாக்கல் : தற்போது காட்சியில் தெரியும் படத்தின் அடுத்தடுத்த சிறிய பகுதிகள் மீது நகர்த்துவதன் மூலம் அல்லது முழுத்திரையினையும் விண்டோ மூடிக்கொள்ளும்வரை நகர்த்துவதன் மூலம் ஒரு வரைகலைக்