பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. bj

162

blank space


களை வெளியிடவும் அனுமதி உண்டு.

. bj : . பிஜே : இணைய தளங்கள் (sites) பல்வேறு களங்களாக (domain) வகைப் படுத்தப்படு கின்றன. பெருங்களம் (major domain), உட் களம் (minor domain) என்ற பிரிவுகளும் உண்டு. இணைய தள முகவரியின் இறுதிப் பகுதியில் இருப்பது பெருங்களப் பிரிவு. . com, . org, . edu, ... என்று இவை அமையும். ஒரு நாட்டின் பெயரைக் குறிக்கும் சொல்லும் பெருங்களப் பிரிவைக் குறிப்பது உண்டு. முகவரியின் இறுதியில் . in என்று அமைந்தால் இந்தியாவைக் குறிக்கும். . bj என்பது பெனின் (benin) நாட்டைக் குறிக்கிறது.

BL : பிஎல் : Blank and Empty Space in text என்பதன் குறும் பெயர்.

black box : கறுப்புப் பெட்டி : எதிர்பார்க்கப்படும் முறையில் உள்ளீடு சமிக்கைகளை மாற்றுகின்ற ஒரு மின்னணு அல்லது எந்திர சாதனம். ஆனால், இதன் உள்ளே எவ்வாறு செயல்படுகிறது என்பது அதைப் பயன்படுத்துகின்றவருக்குப் பெரும்பாலும் மர்மமாகவே இருக்கும்.

black box approach : கறுப்புப் பெட்டி அணுகுமுறை : ஒரு கணினி அமைப்பின் தகவல் மாற்றும் செயல்முறை பற்றிய தொழில்நுட்ப தகவல்களை ஆராய்வதற்குப் பதிலாக, எல்லைகள், இடைமுகங்கள், உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளைப் பற்றி ஆராய்வது.

blackout : இருட்டடிப்பு : மின்சக்தி ஒட்டம் நின்று போதல்.

blank : வெற்றிடம்; காலியிடம் : 1. எழுத்து எதுவும் பதியப் படாத, ஆவணத்தின் ஒரு பகுதி. 2. மின்னணு விரிதாளில் ஒரு கலம் அல்லது கல வரிசைகளில் உள்ளவற்றை அழிக்கக்கூடிய ஒரு கட்டளை. 3. ஒரு எழுத்துத் தகவல் சேர்க்கக்கூடிய வெற்றிடம்.

blank character : வெற்றிட எழுத்து : 1. வெளியீட்டுச் சாதனத் தில் ஒரு எழுத்து இடவெளியை உருவாக்கக் கூடிய ஒரு குறியீடு. 2. பொதுவாக b என்று இதைக் குறிப்பிடுவார்கள்.

blank database : வெற்றுத் தரவுத் தளம்.

blanking : வெற்றிடமாக்கல் : காட்சித் திரையில் ஒரு எழுத்து இருந்தபோதிலும், அந்த இடத்தை வெற்றிடமாக ஆக்கி அந்த எழுத்தை இடாமலிருத்தல்.

blank lines : வெறுங் கோடுகள்.

blank space : வெற்றிடம்.