பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

block

164

block device


block : தொகுதி; தொகுப்பு; தொகை; திரட்டு : 1. உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனத்தில் ஒரே அலகாகக் கருதப்படும் எழுத்து கள், இலக்கங்கள் அல்லது சொற்களின் தொகுதி. எடுத்துக் காட்டாக, ஒரு காந்தவட்டில் இரண்டு இடைப்பட்ட கட்டத்தின் இடைவெளிக்கு இடை யில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கூறலாம். 2. ஒரு தனிப் பதிவேடாகக் கருதப்படும் ஒரு பதிவேட்டின் தொகுதி.

Block Check Character (BCC) : தொகுதி சோதனை எழுத்து.

block cipher : தொகுதி மறையெழுத்து; தொகுதி மறைக் குறி : இணைய தரவுப் பரிமாற்றத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள தரவுகள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. மறுமுனையில் மறை விலக்கம் (decryption) செய்யப்பட்டு மூலத் தரவுப் பெறப்படுகிறது. இதற்குப் பல்வேறு மறையாக்க முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தனி பொதுமறைக் குறிமுறை. ஒரு தனிமறைக் குறியைப் பயன்படுத்தித் தரவுவை மறையாக்கம் செய்வர். அதற்குரிய பொது மறைக்குறியைப் பயன்படுத்கி மறைவிலக்கம் செய்வர். தரவுவைக் குறிப்பிட்ட துண்மி எண்ணிக்கையுள்ள (எடுத்துக் காட்டாக 64 துண்மிகள்) தொகுதிகளாகப் பிரித்து அத்தொகுதியை தனிமறைக் குறி மூலம் மறையாக்கம் செய்யலாம். மறையாக்கம் செய்யப்பட்ட தரவுவிலும் மூலத் தரவுவிலிருந்த அதே எண்ணிக்கையிலான துண்மிகளே இருக்கும். இம்முறைக்கு தொகுதி தனி மறைக்குறி என்று பெயர்.

block compaction : கட்டம் அமைத்தல் : நினைவகம் அமைத்தலில் ஒரு செயல்முறை.

block cursor : கட்டச் சுட்டுக் குறி : உரைக் காட்சித் திரையில் (text screen) வரிக்கு 80 எழுத்துகள் வீதம் 25 வரிகள் திரையிட முடியும். ஒவ்வோர் எழுத்தும் ஒரே அகல, உயரத்தில் அமைந்த கட்டத்துக்குள் படப்புள்ளிகளால் திரையில் காட்டப்படுகிறது. உரை அடிப்படையிலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் சுட்டி (mouse) நிறுவப்படும் போது, அதன் சுட்டுக்குறி ஒர் எழுத்தை உள்ளடக்கும் கட்டத்துக்குள் அமையும் வகையில் உருவாக்கப்படுகிறது.

block device : தொகுதிச் சாதனம் : ஒரு நேரத்தில் தகவல்

பைட்டுகளின் தொகுதியை