பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

blocking object

166

block structure


blocking object : தொகுக்கும் பொருள் : பொருள் சார்ந்த நிரல் களில், பல்வகைக் கட்டுப்பாட்டு இழைகளுக்கு உறுதியளிக்கும் அமைப்பு கொண்ட இயங்காத பொருள்.

block leader : தொகுதித் தொடக்கம்.

block length : தொகுதி நீளம் : ஒரு தொகுதியின் அளவை அளப்பது. பொதுவாக பதிவு, சொற்கள், எழுத்துகள் அல்லது பைட்டுகள் என்ற அலகுகளில் குறிப்பிடப்படும்.

block length, fixed : மாறாத் தொகுதி நீளம்.

block list : தொகுதிப் பட்டியல் : ஒரு கோப்பின் அச்சுத் திணிப்பு. மீண்டும் மாற்றியமைப்பதை குறைவாகச் செய்து, பதிவு களும், புலங்களும் அச்சிடப் படுகின்றன.

block move : தொகுதியாக நகர்த்தல் : 1. ஒரு உரையின் தொகுதியை ஒரு ஆவணம் அல்லது கோப்பில் இருந்து வேறொரு ஆவணம் அல்லது கோப்புக்கு மாற்றுதல். 2. சொல் செயலிகளில் ஒரு பனுவலின் தொகுதியை அடையாளம் கண்டு ஒரு கோப்பின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நகர்த்தும் வசதி.

block operator : தொகுதிச் செயற்குறி

block protection : தொகுதிக் காப்பு.

block quote : தொகுதி வினா.

block size : தொகுதி அளவு : கோப்புப் பரிமாற்றத்தில் அல் லது இணக்கி வழியிலான தரவுப் பரிமாற்றத்தின்போது கணினிக்குள் ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இட மாற்றம் நடக்கும்போது கையாள வேண்டிய தரவுத் தொகுதியின் அளவு முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வன்பொருள் சாதனங்களையும் திறன் மிக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த அளவு தீர்மானிக்கப்படுகிறது.

block sort : தொகுதி வரிசையாக்கம் : ஒரு கோப்பினை தொகுதி தொகுதியாகப் பிரிக்கும் நுட்பம். கோப்பு தொடர்பான குழுக்களாகப் பிரிக்க இந்த நுட்பம் பயன்படும்.

block, storage : சேமிப்புத் தொகுதி.

block structure : தொகுதிக் கட்டமைப்பு : தொடர்புடைய அறிவிப்புகள், தொடர்கள் ஆகியவற்றை ஒன்றாகத் தொகுப்பதற்

கான நிரல் கோட்பாடு.