பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

block structured language

167

BMMC


block structured language : தொகுதிக் கட்டமைப்பு மொழி.

blocks world : தொகுதிகள் உலகம்; தொகுதிகள் சூழல் : எந்திர மனிதனியல் மற்றும் இயற்கை மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தொகுதிகளின் சூழல்.

block transfer : தொகுதிப் பரிமாற்றம் : சேமிப்பகத்தின் ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தரவுத் தொகுதி முழுவதையும் மாற்றுதல்.

blow : ஊது : உப்பல் : துண்மிகளின் மென்கம்பிகளை ஊதி ப்ரோம் PROM சிப்புகளில் தரவு அல்லது குறியீடுகளை எழுதுதல். 1 துண்மி தனித்து விடப்படும்.

blow up : தடுத்து நிறுத்து : மிகை உப்பல் : ஒரு பிழை காரண மாகவோ, தன்னால் கையாள முடியாத தரவுகளைப் பெற்ற சூழ்நிலையிலோ ஒரு நிரல் திடீரென்று நின்று விடுதல்.

blue ribbon problem : நீல நாடா பிரச்சினை : முதல் முயற் சியிலேயே சரியாக இயங்கும் கணினி ஆணை தொடர். பிழை நீக்கவேண்டிய அவசியமில்லை.

blue ribbon programme : நீல நாடா நிரல் : முதல் முயற்சியிலேயே மிகச் சரியாக இயங்கி பிழைநீக்கம் செய்யப்பட வேண்டிய தேவையில்லாத நிரல்.

blue screen : நீலத்திரை : திரைப்படங்களில் ஒர் உருப் படத்தின் மீது இன்னோர் உருப் படத்தைப் பொருத்தி இணைத்து சிறப்பு விளைவுக் காட்சிகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். முதலில் ஒரு நீலத் திரைக்கு முன்னால் ஒரு காட்சியை அல்லது ஒருவரின் நடிப்பைப் படம் பிடித்துக் கொள்வர். அடுத்து, விரும்புகின்ற பின்புலத்தைத் தனியாகப் படமெடுப்பர். முதலில் எடுத்த காட்சியை இந்தப் பின்புலத்தின் மீது பதியச் செய்வர். இப்போது குறிப்பிட்ட பின்புலத்தில் அக்காட்சி நடைபெறுவதுபோல இருக்கும். ஒருவர் நடந்து செல்வதையும் பாலைவனத்தையும் தனித்தனியே படம் பிடித்து, அவர் பாலைவனத்தில் நடப்பது போலக் காட்டிவிட முடியும்.

. bm : . பிஎம் : ஒர் இணையதள முகவரியில், அத்தளம் பெர் முடா நாட்டில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பிரிவு.

BMMC : பிஎம்எம்சி : அடிப்படை மாதப் பாராமரிப்புக் கட்டணம் என்று பொருள்படும்