பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. bmp

168

board


Basic Monthly Maintenance Charge என்பதன் குறும் பெயர்.

. bmp : . பிஎம்பீ : துண்மி வரை படக் கோப்புப் படிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள, ராஸ்டர் வரைகலைக் படத்தைச் சுட்டும் ஒரு கோப்பின் வகைப் பெயர் (extension).

. bn : . பிஎன் : ஒர் இணைய தளம் புரூணை தாருஸ்ஸ்லாமில் அமைந்துள்ளது என்பதைச் சுட்டும் பெருங்களப் பிரிவின் பெயர்.

BNC : பிஎன்சி : இணையச்சு (coaxial) வடத்தில் இணைப்புக் காகப் பயன்படுத்தப்படுவது. ஒரு உருளைபோல தோன்றும் இந்த பிளக்கின் இரு எதிர்ப் புறங்களிலும் இரு சிறிய கம்பிகள் இருக்கும். பிளக்கை நுழைத்தவுடன், சாக்கெட்டை இயக்கினால் பிளக்கில் உள்ள கம்பிகள் இறுக்கம் அடைகின்றன.

BNC connector : பி. என். சி இணைப்பி : கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுக் கம்பி வடத்தின் முனையைச் சாதனங்களில் இணைக்கப் பயன்படுகிறது. வண்ணத் தொலைக் காட்சிகளில் அலைவாங்கிகளை இணைக்க இத்தகைய இணைப் பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைப்பியை அதற்குரிய செருகு வாயில் செருகி 900 திருப் பினால் சரியாகப் பொருந்திக் கொள்ளும்.

BNF : பிஎன்எஃப் : பேக்கஸ் இயல்பு வடிவம் என்று பொருள்படும் Backus Normal form என்பதன் குறும்பெயர். ஆர்டிபி எம்எஸ் தரவுத்தள அட்டவணை களில் பேசப்படுவது.

. bo : . பிஒ : ஒர் இணைய தளம் பொலீவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க, முகவரியின் இறுதியில் குறிக்கப்படும் பெருங்களப் பெயர்.

board : அட்டை : அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டை என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுவது. ஒரு தட்டையான, மெல்லிய, செவ்வக வடிவமுள்ள அட்டை கணினியின் உள்ளிருப்பது ஒன்று அல்லது அதற்கு மேற்